ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை! தொகுதி ஆய்வில் நாகை MLA உறுதி!

image

image

image

image

நாகை. நவ.22., நேற்று (21.11.17) நாகை ஒன்றியம்  மஞ்சக்கொல்லை ஊராட்சி பகுதியில் நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

புத்தூர் வடமலையான் தோட்டம் குடியிருப்பு பகுதிகளில் வடிகால் இல்லாமல் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், அங்குள்ள கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்று அப்பகுதி மக்கள் புகார் கூறினர். உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பிறகு, புத்தூர் ஆட்டோ ஸ்டண்ட் அருகில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளால் கழிவுநீர் செல்லும் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளதை உடனடியாக சரி செய்ய உத்தரவிட்டார்.

மேலும், அங்கு ஒரு குளம் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக விவசாய சங்க நிர்வாகி மூர்த்தி அவர்கள் MLA-விடம் கூறினார். உடனடியாக அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டு, இது சம்பந்தமாக அறிக்கை தயார் செய்து தருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடமும் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இச்சந்திப்பில் MLA அவர்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாய சங்க நிர்வாகிகள், மஜக மற்றும் அதிமுகவினர் உடன் இருந்தனர்.

தகவல்;
#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்.
22.11.17