திருவாரூர்.அக்.06., இன்று மனிதநேய ஜனநாயக கட்சி மருத்துவ சேவை அணியின் சார்பில் திருவாரூர் மாவட்டம் உதயமார்தாண்டபுரம், நாச்சிகுளம் பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது. மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இம்முகாமை, டாக்டர் த.கல்யாண சுந்தரம் அவர்கள் துவைக்கி வைத்தார்கள். வருகை தந்த அனைவருக்கும் மஜக பொருப்பாளர்கள் அப்துல் ரஹ்மான், ஜெஹபர் சாதிக் ஆகியோர் நிலவேம்பு கசாயம் வழங்கி உபசரித்தனர். இதில் நூர் மெடிக்கல் ராவுத்தர், ஜமாத் செயலாளர் அலாவுதீன், ரஹ்மத் மீரான், அப்துல் ரெஜாக் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முகாம் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாச்சிகுளம் ரசீது அவர்கள் சிறப்பாக செய்திருந்தார். டெங்கு காய்ச்சல் பெண்கள் மற்றும் சிறு வயதினர்களை அதிகம் தாக்குவதால் இம்முகாமை பரவலாக நாச்சிகுளம் பகுதியின் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதனையேற்று தொடர் முகாம் நடத்துவதற்கான ஆலோசனையில் மஜகவினர் ஈடுபட்டுள்ளனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நாச்சிகுளம்_கிளை
தமிழகம்
தமிழகம்
இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றிய மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளராக பணியாற்றி வந்த அன்பு சகோதரர் இதயதுல்லா அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்) அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், மனிதநேய சொந்தங்களுக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது மறுமை வாழ்வு சிறக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். இவண், M.தமிமுன் அன்சாரி MLA, பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி. 06.10.17
திரு.நடராஜன் உடல் நிலைக் குறித்து மஜக பொதுச்செயலாளர் நலம் விசாரிப்பு!
சென்னை.அக்.06., புதிய பார்வை பத்திரிக்கை ஆசிரியரும், தமிழ் தேசிய உணர்வாளருமான அண்ணன் திரு.நடராஜன் அவர்களின் உடல் நலம் குறித்து, சகோதரர் T.T.V.தினகரன் அவர்களிடம் அழைப்பேசியில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கேட்டறிந்தார். தற்போது, அறுவை சிகிச்சைக்கு பிறகு அவரது உடல் நலம் தேறி வருவதாகவும், ICU சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் தினகரன் கூறினார். அவர் நலம் பெற வாழ்த்துவதாகவும், அவரது உடல் நலம் தேறியதும் நேரில் வந்து பார்ப்பதாகவும் பொதுச் செயலாளர் கூறினார். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி. #தலைமையகம்_சென்னை 06.10.17
பொதக்குடி மஜக சார்பில் மூன்றாவது நாளாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி..!
திருவாரூர்.அக் 06,. பொதக்குடி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கிளை செயலாளர் ஜமால் முகம்மது தலைமையில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி இன்று மூன்றாவது நாளாக பொதக்குடி மேலப்பள்ளி மற்றும் பாத்திமா பள்ளி ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிலமேம்பு கசாயம் கொடுத்து சிறப்பித்தனர் தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருவாரூர்_மாவட்டம் 06/10/2017
புதிய ஜமாத்துல் உலமா தலைவருக்கு மஜக வாழ்த்து!
(மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் வாழ்த்து செய்தி) ஜமாத்துல் உலமாவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மௌலானா மௌலவி பி.ஏ.காஜா முஈனுதின் பாகவி அவர்களின் பணிகள் சிறக்க மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள மௌலவி v.s. அன்வர் பாதுஷா உலவி, PhD, அவர்களுக்கும், பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி அவர்களுக்கும் எமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். சமுதாயத்தின் தாய் அமைப்பாக திகழும் ஜமாத்துல் உலமா, சமுதாயத்தின் உயிர் நாடி பிரச்சனைகளில் சங்கைக்குரிய உலமா பெருமக்களை களத்தில் இறக்கி ஆற்றி வரும் பணிகள் சிறப்பானவை. சமுதாய ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், நாட்டு நலன் ஆகிய விவகாரங்களில் புதிய நிர்வாகிகள் தலைமையில் ஜமாத்துல் உலமா சபை சிறப்பாக செயல்பட எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். வாழ்த்துக்களுடன் #M_தமிமுன்_அன்சாரி_MLA, பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 06.10.17.