வேலூர்.அக்.08., மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் மேற்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் S.MD.நவாஸ் தலைமையில் ஆம்பூரில் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் M.ஜஹீருஸ் ஜமா, P.M.ஷபீவுல்லாஹ், S.M.ஷானவாஸ் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி பற்றி ஆலோசிக்கப்பட்டது. பிறகு மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர கிளை நிர்வாகத்திற்கு பொதுக்குழு கூட்டம் கூட்டி அமைப்பு தேர்தல் நடத்துவது எனவும், மாவட்டம் முழுவதும் கொடி ஏற்றுவது எனவும், மஜகவின் உறுப்பினர் சேர்க்கை செயலியில் (ஆப்சில்) விரைவாக உறுப்பினர் சேர்ப்பது எனவும், மாவட்டம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மேற்கு_மாவட்டம் 08.10.17
தமிழகம்
தமிழகம்
காயல்பட்டிணம் மஜக சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்…!
தூத்துக்குடி.அக்.08., தூத்துக்குடி தெற்கு மாவட்டம் காயல்பட்டிணம் நகர மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் பைபாஸ் ரோட்டில் வைத்து நகர செயலாளர் S.M.ஜிபுரி தலைமையில் நடைப்பெற்றது. இதில மாவட்ட துணை செயலாளர் முகம்மது நஜிப், நகர பொருளாளர் மீரான், நகர துணை செயலாளர் ஜியாவுதீன், நகர மருத்துவ சேவை அனி செயலாளர் சுல்தான், மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் சதாம் உள்ளிட்ட மஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் 15 வது வார்டுக்கு உட்பட்ட புறநகர் பகுதிகளான மங்கள விநாயகர் கோவில் தெரு, உச்சிமகாளி அம்மன் கோவில் தெரு, பைபாஸ் ரோடு பகுதிகளை சேர்ந்த 400 க்கும் அதிகமானோர் நிலவேம்பு குடிநீர் அருந்தி பயணடைந்தனர். அதே போல் 6 வது வார்டுக்குட்பட்ட சித்தன் தெரு பகுதியிலும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING #தூத்துக்குடி_தெற்கு_மாவட்டம் 08.10.2017
ஜமாத்துல் உலமா சபை பொருலாளரை மஜக நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து..!
தூத்துக்குடி.அக்.08., ஜமாத்துல் உலமா சபையின் மாநில பொருலாளராக புதிதாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் கண்ணியமிகு முஜீப் ரஹ்மான் மஸ்லஹி அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் அறிவுறுத்தளின் பேரில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அ.ஜாஹீர் உசேன் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். இதில் நெல்லை கிழக்கு மாவட்டபொருலாளர் நவாஸ், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் ராசிக் முசம்மில், காயல் சல்சமீல் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தூத்துக்குடி_தெற்கு _மாவட்டம் 08.10.17
மஜக சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்…
வேலூர்.அக்.08., வேலூர் மாநகரம் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) விருதம்பட்டு 15வது வார்டு கிளை சார்பாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரபிக் ரப்பானி தலைமையில் நடைப்பெற்றது. இதில் கிளை செயலாளர் முஹம்மத் ஆசிப், பொருளாளர் முஹம்மத் இஸ்மாயில், துணை செயலாளர்கள் அஸ்கர், நவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காலை சரியாக 9-மணியளவில் நிகழ்ச்சியை மாவட்ட அமைப்புக்குழு பொருப்பாளர்கள் முஹம்மத் ஜாபர், முஹம்மத் வசீம் ஆகியோர் தொடக்கி வைத்தனர். இதில் நிர்வாகிகள் ஹாபீஸ் ஆசிப், முஹம்மத் ஆசிப், லதீப் மற்றும் மஜகவின் செயல்வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதில் 400 க்கும் அதிகமானோர் முகாமிற்கு வருகை தந்த நிலவேம்பு குடிநீர் அருந்தி பயணடைந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_கிழக்கு_மாவட்டம் 08.10.2017
இளைஞர்களை ஈர்க்கும் மஜக!
திருப்பூர்.அக்.07., தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சி முன்னெடுக்கும் அரசியல் நகர்வுகளை பார்த்து ஏராளமான மக்கள் மஜகவில் தங்களை இணைத்துக்கொள்ள ஆர்வமாக உள்ளனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்திலும் இளைஞர்கள் தொடர்ச்சியாக கட்சியில் இணைந்து வருகின்றனர். நேற்று 06/10/17 அன்று திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து செரங்காடு செளகத் அலி அவர்களின் தலைமையில் திருப்பூர் மாவட்ட மஜக தலைமையகம் நோக்கி வந்த இளைஞர்கள் . மாவட்ட செயலாளர் இ.ஹைதர் அலி அவர்கள் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக்கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருப்பூர்_மாவட்டம் 07/10/17