கடலூர்.அக்.12., மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் மாவட்டம் (தெற்கு) பரங்கிப்பேட்டை கிளை சார்பில் நடத்திய டெங்கு விழிப்புணர் பிரச்சாரம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் இன்று மஜக கிளை செயலாளர் உமர் பாரூக் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளை பொருளாளர், கிளை துணைச் செயலாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த முகாமில் பரங்கிப்பேட்டை அரசு பள்ளி மாணவர்களும் கிராம பொதுமக்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். அந்த வழியே வாகனத்தில் சென்ற பொது மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு ஆர்வமாக வந்து நிலவேம்பு கசாயம் அருந்தி சென்றார்கள் என்பது குறிப்பிடதக்கது. தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #பரங்கிப்பேட்டை #கடலூர்_மாவட்டம்_தெற்கு 12.10.17
தமிழகம்
தமிழகம்
செங்கம் நகருக்கு வருகைதந்த மஜக மாநில நிர்வாகிகள்…
செங்கம்.அக்.11., மனிதநேய ஜனநாயக கட்சி மாநில நிர்வாகிகள் செங்கம் நக௫க்கு வ௫கை. இதில் மாநில துணை செயலாளர் பல்லாவரம் ஷஃபி மற்றும் மாநில நிர்வாகத்தினர் வ௫கை தந்தனர். மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கம் ஒன்றிய துணை செயலாளர் இதாயத் சமீபத்தில் சாலை விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார். அவரது குடும்பத்தரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பணிகள் மற்றும் கட்சி வளர்ச்சி குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் K.காஜாஷரிப், மாவட்ட மனித உரிமை அணி செயலாளர் M.அகமத்பாஷா, மாவட்ட இளைஞர் அணி செயலாளர M.ஜான் பாஷா மற்றும் ஒன்றிய செயலாளர் தாஜுதீன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #செங்கம்_ஒன்றியம்
எடையூர்-சங்கந்தியில் மஜகவின் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்!
திருவாரூர்.அக்.11., திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி தாலுக்க எடையூர்-சங்கந்தியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நடத்திய டெங்கு விழிப்புணர் பிரச்சாரம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம். மஜக கிளை செயலாளர் தமிம் அன்சாரி தலைமையில் நடைபெற்றது. கிளை பொருளாளர் தவுலத் பாட்சா, ஹமீது நபில், கலீல் ஜிப்ரான், நாச்சிகுளம் அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை ஏற்றனர் இம்முகாமில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் கலந்து கொண்டு டெங்கு பற்றிய விழிப்புணர்வு விளக்க பிரச்சாரம் செய்து நிலவேம்பு கசாயம் கொடுத்து முகாமை துவக்கி வைத்தார். இந்த முகாமில் சங்கந்தி அரசு பள்ளி மாணவர்களும் கிராம பொதுமக்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். அந்த வழியே வாகனத்தில் சென்ற பொது மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு ஆர்வமாக வந்து நிலவேம்பு கசாயம் அருந்தி சென்றார்கள் என்பது குறிப்பிட தக்கது. தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #எடையூர்_சங்கந்தி #திருவாரூர்_மாவட்டம் 11.10.17
பொதக்குடி மஜக சார்பில் நான்காவது நாளாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி..
திருவாரூர்.அக்.11., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளை சார்பில் கிளை செயலாளர் ஜமால் முகம்மது தலைமையில் தொடர்ந்து நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று நான்காவது நாளாக பொதக்குடி மஜக கிளை அலுவலகத்தில் பொது மக்கள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிலமேம்பு கசாயம் கொடுத்து சிறப்பித்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK _IT_WING #திருவாரூர்_மாவட்டம் 11/10/2017
கோவையில் மனிதநேய ஜனநாயக தொழிற் சங்க நிர்வாகக் குழுகூட்டம்..!
கோவை.அக்.10., கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக தொழிற் சங்க (MJTS) நிர்வாகக் கூட்டம் மாவட்ட செயலாளர் ABS.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மஜக மாவட்ட துணை செயலாளர் ABT.பாருக், மனிதநேய ஜனநாயக தொழிற் சங்க மாவட்ட துணை செயலாளர்கள் சுதீர், மக்கான் ஜாபர் ஆகியோர் கலந்துகொண்டனர், இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. 1. மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கத்தை கோவை மாவட்ட அனைத்து கட்சி தொழிற் சங்க கூட்டு கமிட்டியில் இணைப்பது என தீர்மானிக்கப்பட்டது, 2.தொழிற் சங்கத்தின் பகுதி மற்றும் கிளை நிர்வாகிகளை சந்தித்து தொழிற் சங்க வளர்ச்சி குறித்து ஆலோசிப்பது என தீர்மானிக்கப்பட்டது, 4. 24/09/2017 அன்று கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக நடைபெற்ற பிரம்மாண்ட பொதுகூட்டத்தை நடத்திய அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 10.10.17