பரங்கிப்பேட்டையில் மஜகவின் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்!

image

image

image

கடலூர்.அக்.12., மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் மாவட்டம் (தெற்கு) பரங்கிப்பேட்டை கிளை சார்பில் நடத்திய டெங்கு விழிப்புணர் பிரச்சாரம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் இன்று மஜக கிளை செயலாளர் உமர் பாரூக் தலைமையில் நடைபெற்றது.

இதில் கிளை பொருளாளர், கிளை துணைச் செயலாளர்கள்  முன்னிலையில் நடைபெற்றது.

இந்த முகாமில் பரங்கிப்பேட்டை அரசு பள்ளி மாணவர்களும் கிராம பொதுமக்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

அந்த வழியே வாகனத்தில் சென்ற பொது மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு ஆர்வமாக வந்து நிலவேம்பு கசாயம் அருந்தி சென்றார்கள் என்பது குறிப்பிடதக்கது.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#பரங்கிப்பேட்டை
#கடலூர்_மாவட்டம்_தெற்கு
12.10.17