கோவை.அக்.31., கோவை மாவட்டத்தில் கடுமையாக நிலத்தடி நீர் அடியோடு வற்றி தண்ணீர் பற்றாக்குறை கடந்தகாலங்களில் ஏற்பட்டது, தற்போது மழையின் காரணமாக கோவையில் அனைத்து குளங்களும் நிரம்பிவருகிறது ஆனால் அந்த குளங்களில் ஆகாயத்தாமரை பரவியுள்ளதால் நீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது, ஆகவே இது குறித்து கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட சூற்றுச்சூழல் அணி செயலாளர் A.K.முஹம்மது சலீம் அவர்கள் தலைமையில் குளங்களில் பரவியுள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றக்கோரி கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது, மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார், இந்நிகழ்வில் மாவட்ட துணைசெயலாளர் ரபீக், மருத்துவ அணி மாவட்ட துணை செயலாளர் செய்யது இப்ராஹீம் மற்றும் பகுதி நிர்வாகிகள் சமீர், அபு, கமால் பாஷா ஆகியோர் கலந்துகொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 30.10.17
தமிழகம்
தமிழகம்
வாட்ஸ்அப் தகவலால் மஜக கள ஆய்வு..! அமைச்சர் பார்வையிட்டு உடனடி தீர்வு..!
வேலூர்.அக்.30., வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் உள்ள உடையேந்திரம் பேரூராட்சியில் செயல்பட்டு வரும் ஹைதர் அலி மசூதிக்கு செல்லும் வழியில் சில சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது என்று நேற்று முன்தினம் மஜக சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் ஜே.எம். வசீம் அக்ரம் தலைமையில், மஜக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் P.M.ஷபீவுல்லாஹ், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் V.அப்துல்லாஹ், S.M. ஜீலான் ஆகியோர் ஹைதர் அலி பள்ளிவாசலுக்கு சென்று ஆய்வு செய்தனர். ஆய்வு முடிந்தவுடன் மஜகவின் மாநில துணை செயலாளர் J.M.வசீம் அக்ரம் அவர்கள், தமிழக தொழிலாளர் மற்றும் வக்பு வாரிய அமைச்சர் டாக்டர்.நிலோபர் கபீல் அவர்களை தொடர்பு கொண்டு மேற்கண்ட பிரச்சனை பற்றியும், எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றியும் எடுத்துக் கூறினார். அதிகாரிகள் இன்னும் ஓரிரு நாட்களில் மேற்கண்ட இடத்தை சீர்செய்வதாக உறுதி அளித்தனர். நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் கோரிக்கையை ஏற்று ஹைதர் அலி மசூதியை ஆய்வு செய்த மாண்புமிகு தமிழக தொழிலாளர் நலம் மற்றும் வக்பு வாரிய அமைச்சர் டாக்டர்.நிலோபர் கபில் அவர்கள் நான்கு மின்விளக்குகள் அமைத்து தர உத்தரவிட்டார். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில
புத்துணர்ச்சியுடன் நடைபெற்ற தஞ்சை வடக்கு மாவட்ட செயற்குழு..!
குடந்தை.அக்.30.,மனிதநேய ஜனநாயக கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று 29/10/2017 ஞாயிறு மாலை 6.00 மணியளவில் கும்பகோணம் அனஸ் செஸ்டாரண்டில் மாநில செயலாளர் ராசுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் இமாம் ரசூல் மைதீன் அவர்கள் நீதி போதனையுடன் ஆரம்பித்துவைக்க, புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட செயலாளர் முஹம்மது மாஃரூப் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அதனை தொடர்ந்து பொருளாளர் இக்பால் சேட் அவர்கள் நிதி மற்றும் கட்சி வளர்ச்சி பற்றியும் மாநில செயலாளர் ராசுதீன் அவர்கள் தற்போதைய அரசியல் நிகழ்வுகள் பற்றியும் ஜனநாயக படுகொலை செய்யப்பட்ட டிசம்பர் 6 அன்று இரயில் மறியல் போராட்டம் பற்றியும் சிறு உரை ஆற்றினார்கள். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தஞ்சை_வடக்கு_மாவட்டம்
அதிரை மஜக கொடியேற்றம் மற்றும் அலுவலகம் திறப்பு விழா…!
அதிரை.அக்.29., மனிதநேய ஜனநாயக கட்சி அதிராம்பட்டினம் பேரூர் அலுவலகம் திறப்பு விழா 29/10/2017 ஞாயிறு மாலை 5மணியளவில் நகர செயளாலர் செல்லராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னதாக மஜக மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீது B.COM அவர்கள் தக்வா பள்ளிவாசல் அருகில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்த பின் அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநில துணைப் பொதுச்செயளாலர் மதுக்கூர்.ராவுத்தர் ஷா, மாநில செயளாளர் நாச்சிக்குளம் தாஜீதீன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் எ.எம்.ஹாரிஸ் ஆகிய மாநில நிர்வாகிகளுடன்.. குவைத் மண்டல துணை செயளாலர்கள் அதிரை பைசல் அஹமது, நாச்சிக்குளம் அப்துல் ரஹ்மான், மாவட்ட செயளாலர் அஹமது கபீர், மாவட்ட துணை செயளாலர் முகைதீன், பேராவூரணி ஸலாம் ஆகியோர், அதிரை நிர்வாகிகளான நகர பொருளாளர் சாகுல் ஹமீது, சமீர் அஹமது, அபுபைதா மற்றும் மனிதநேய சொந்தங்கள் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #அதிரை_நகரம் #தஞ்சை_தெற்கு_மாவட்டம்
ஆம்பூர் தமுமுக முன்னாள் மாணவரணி செயலாளர் மஜகவில் இணைந்தார்…!
வேலூர்.அக்.29., வேலூர் மேற்கு மாவட்டம் ஆம்பூரில் தமுமுகவின் முன்னாள் ஆம்பூர் நகர மாணவரணி செயலாளர் சரிபத்துல்லா அவர்கள் இன்று மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர் M.ஜஹீருஸ் ஜமா அவர்கள் முன்னிலையில் இணைந்தார். இந்நிகழ்வில் 15க்கும் மேற்பட்ட இளைஞர் தன்னெழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்து கொண்டார்கள். இதில் மஜகவின் ஆம்பூர் நகர நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மேற்கு_மாவட்டம்