வாட்ஸ்அப் தகவலால் மஜக கள ஆய்வு..! அமைச்சர் பார்வையிட்டு உடனடி தீர்வு..!

image

image

image

வேலூர்.அக்.30., வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் உள்ள உடையேந்திரம் பேரூராட்சியில் செயல்பட்டு வரும் ஹைதர் அலி மசூதிக்கு செல்லும் வழியில் சில சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது என்று நேற்று முன்தினம் மஜக சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர்
ஜே.எம். வசீம் அக்ரம் தலைமையில், மஜக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் P.M.ஷபீவுல்லாஹ்,  முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் V.அப்துல்லாஹ், S.M. ஜீலான் ஆகியோர் ஹைதர் அலி பள்ளிவாசலுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

ஆய்வு முடிந்தவுடன் மஜகவின்  மாநில துணை செயலாளர்
J.M.வசீம் அக்ரம் அவர்கள்,
தமிழக தொழிலாளர் மற்றும் வக்பு வாரிய அமைச்சர் டாக்டர்.நிலோபர் கபீல் அவர்களை தொடர்பு கொண்டு மேற்கண்ட பிரச்சனை பற்றியும், எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றியும் எடுத்துக் கூறினார்.

அதிகாரிகள் இன்னும் ஓரிரு நாட்களில் மேற்கண்ட இடத்தை சீர்செய்வதாக உறுதி அளித்தனர்.

நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் கோரிக்கையை ஏற்று  ஹைதர் அலி மசூதியை ஆய்வு செய்த மாண்புமிகு தமிழக தொழிலாளர் நலம் மற்றும் வக்பு வாரிய அமைச்சர் டாக்டர்.நிலோபர் கபில் அவர்கள் நான்கு மின்விளக்குகள் அமைத்து தர உத்தரவிட்டார்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் J.M.வசீம் அக்ரம் தலைமையில் மஜக நிர்வாகி பள்ளிவாசல் இடத்தை சுத்தம் செய்தனர்.

இந்நிகழ்வில் மஸ்ஜித் நிர்வாகி அஹ்மத் பாஷா, பேரூராட்சி முன்னாள் தலைவர் அசோகன், நவீத், அப்சல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

#தகவல்:-
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_மாவட்டம்
30.10.2017