விழுப்புரம்.27., மனிதநேய ஜனநாயக கட்சி விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று கொடி ஏற்பு நிகழ்ச்சியை அடுத்து மாலை ரம்ஜான் நோன்பு துறப்பு (இஃப்தார்) நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மஜக மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாருன்_ரசீது M.com மற்றும் மாநில நிர்வாக குழு உறுப்பினர் #JS_ரிஃபாயி_ரஷாதி ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் மஜக விழுப்புரம் மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் N.அன்வர்பாஷா, மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது யூசூப், தலைமை கழக பேச்சாளர் அப்துல் ரஹ்மான், திருவண்ணாமலை மாவட்ட பொருளாளர் SL.செய்யது முஸ்தபா, மாவட்ட துணை செயலாளர் இம்தியாஸ் உசைன் மற்றும் விழுப்புரம் மாவட்ட துணை செயலாளர்கள் Jsm.சௌகத், குத்தூஸ், திருக்கோவிலூர் நகர செயலாளர் அக்பர், பொருளாளர் சாதிக், திருக்கோவிலூர் ஒன்றிய செயலாளர் ஜாவித், திருக்கோவிலூர் நகர, பகுதி, ஒன்றிய நிர்வாகிகள் விழுப்புரம் நகர செயலாளர், A.முஹம்மது அலி ஜின்னா, பொருளாளர் அலி முஹம்மது ஜபிர், விழுப்புரம் நகர நிர்வாகிகள், திருவண்ணாமலை நகர செயலாளர் அக்பர், நகர இளைஞர் அணி செயலாளர் தர்விஸ், கடம்பை ஒன்றிய செயலாளர் ரஹமத்துல்லாஹ் மற்றும் நகர,
தமிழகம்
தமிழகம்
காடுவெட்டி குரு உடலுக்கு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA நேரில் சென்று மரியாதை!
அரியலூர். மே.27., வன்னியர் சங்கத் தலைவர் #காடுவெட்டி_குரு அவர்கள் மரணம் அடைந்ததையொட்டி அவரது சொந்த ஊரான காடு வெட்டிக்கு #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் நேற்று இரவு நேரில் சென்று அவரது உடலை பார்த்து மரியாதை செய்தார்.அவரது குடும்பத்தினரையும், வன்னியர் சங்கத் தலைவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். #பா_ம_க தலைவர் #GK_மணி அவர்களை அழைப்பேசியில் தொடர்புக் கொண்டு மஜகவின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்தினார்.பிறகு பத்திரிக்கையாளரை சந்தித்த அவர், அப்பாசங்கர் கமிஷனை தமிழகத்தின் மூலை முடுக்கேளெல்லாம் முழங்கியவர் காடுவெட்டியார் என்றும் வன்னிய மக்களின் முன்னேற்த்திற்காக உழைத்தது மட்டும்மின்றி, முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டுக்காகவும் குரல் கொடுத்தார். சட்டமன்றத்தில் சமூக நீதிக்காக நிறைய பேசினார் என்று புகழாரம் சூட்டினார்.அவரது பேட்டியை அருகில் நின்று கேட்ட வன்னிய சமூக மக்கள் கண்ணீர் மல்க உணர்ச்சி வசபட்டனர். விடைப்பெறும் போது வன்னிய மக்கள் கை கொடுத்து வருகைக்கு நன்றி கூறினர்.பொதுச்செயலாளருடன் மாநிலச் செயலாளர்கள் நாச்சிக்குளம் தாஜுதீன், ராசுதீன், அரியலூர் மாவட்ட செயலாளர் அக்பர், கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மஜகவினர் கலந்துக் கொண்டனர்.தகவல்;#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,#MJK_IT_WING,#மஜக_அரியலூர்_மாவட்டம்.26.05.2018
விழுப்புரத்தில் கொடியேற்று விழா..! மஜக மாநில பொருளாளர் பங்கேற்ப்பு..!
விழுப்புரம். மே.26., இன்று விழுப்புரம் மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் விழுப்புரத்தில் இரு வேறு இடங்களில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மஜக மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது மற்றும் மாநில நிர்வாக குழு உறுப்பினர் #JS_ரிஃபாயி_ரஷாதி ஆகியோர் கொடியேற்றி வைத்து சிற்றுரையாற்றினர். இதில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் N.அன்வர்பாஷா, விழுப்புரம் மாவட்ட செயலாளர் இப்ராஹிம், தலைமை செயற்குழு உறுப்பினர் முஹம்மது யூசூப், தலைமை கழக பேச்சாளர் அப்துல்ரஹ்மான், மாவட்ட துணை செயலாளர் சவுகத் அலி, நகர செயலாளர் முஹம்மது அலி ஜின்னா மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_விழுப்புரம்_மாவட்டம் 26.05.2018
சமூக நீதியின் போர்க்குரல் காடுவெட்டி குரு…! மஜக இரங்கல்..!!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..) வன்னியர் சங்க தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி குரு அவர்கள் நேற்று உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி வேதனையளிக்கிறது. வன்னிய சமுதாய மக்களின் போர்க்குரலாகவும், சமூக நீதி சார்ந்த கொள்ளைகளில் சமரசமற்ற போராளியாகவும் திகழ்ந்தவர் என்ற அடையாளங்களோடு அவர் விடை பெற்றிருக்கிறார். மருத்துவமனையில் அவரை சென்று பார்க்க வேண்டும் என்று விரும்பிய போது, தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் இருப்பதால், சந்திக்க முடியாமல் போய்விட்டது. அவர் வன்னிய சமுதாய மக்களை தாண்டி பிற சமூக மக்களின் நலன்களுக்கும் குரல் கொடுத்தார். கல்வி, வேலைவாய்ப்பு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர்களில் அவரது பங்கும் முக்கியமானது. அவரை இழந்து தவிக்கும் வன்னிய சமுதாய மக்களுக்கும், குடும்பத்தினருக்கும் மஜக வின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவண், #மு_தமிமுன்_அன்சாரி_MLA, #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி, 26/05/2018.
வேல்முருகன் கைதில் உள்நோக்கம்! மஜக கடும் கண்டனம்…
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் அறிக்கை..) தூத்துக்குடியில் கலவரத்தாலும், துப்பாக்கிசூட்டாலும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற #தமிழக_வாழ்வுரிமை_கட்சி தலைவர் #வேல்முருகன் அவர்களை காவல்துறை விமான நிலையத்தில் கைது செய்துள்ளது. சமீபத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வசூலிக்கும் சுங்க கட்டண எதிர்ப்பு தெரிவித்து அவர் நடத்திய போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குக்காக, இப்போது அவரை கைது செய்திருப்பதாக காவல்துறை கூறுவதை ஏற்க முடியவில்லை. அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இத்தனை நாள் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது தூத்துக்குடி சம்பவத்தை முன்னிட்டு கைது செய்திருப்பது உள்நோக்கம் கொண்டதாகும், அதை கண்டிகிறோம். பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களை யாரும் சென்று சந்தித்து விடக்கூடாது என்ற குறுகிய நோக்கில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுபோன்ற போக்குகள் தமிழக காவல்துறைக்கு மேலும் களங்கங்களையே உருவாக்கும் என்பதை சுட்டிக் காட்டுகின்றோம். இவண்; #மு_தமிமுன்_அன்சாரி_MLA, #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி, 26/05/2018.