(2017-2018)-ம் ஆண்டிற்கான வரவு-செலவு அறிக்கை குறித்து மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி,MLA வெளியிடும் அறிக்கை) 2017-2018-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை எளியவர்களின் எண்ண ஓட்டங்களை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக மனிதநேய ஜனநாயக கட்சி கருதுகிறது. கடந்த நிதி நிலை அறிக்கையில் முன்னாள் முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களால் அறிவிக்கப்பட்ட நீர் ஆதார மேலாண்மை, வறுமை ஒழிப்பு, ஏழைகளுக்கான வீட்டுவசதி, திறன் மேம்பாடு, தூய்மை தமிழ்நாடு, ஆகிய ஐந்து அம்ச திட்டக் கொள்கைகைகள் இந்த நிதிநிலை அறிக்கையில் பின்பற்றப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. • வறுமை ஒழிப்பிற்காக 741.12 கோடி ஒதுக்கீடு. • தமிழ் வளர்ச்சித்துறைக்காக 48 கோடி ஒதுக்கீடு. • மீனவர்களுக்கு புதிதாக 5 ஆயிரம் வீடுகள் கட்ட 85 கோடி ஒதுக்கீடு. • நாகப்பட்டினம் உள்ளிட்ட மீன் பிடித் துறைமுகங்களை நவீனப்படுத்த 1105 கோடிக்கு ஒப்புதல். • அத்திக்கடவு - அவினாசி குடிநீர் திட்டத்திற்காக 250 கோடி ஒதுக்கீடு. • நீர்வள ஆதாரத்துறைக்கு 4791 கோடி ஒதுக்கீடு. • பள்ளிக் கல்விக்காக 26,932 கோடியும், உயர்க் கல்விக்காக 3,680 கோடியும் ஒதுக்கீடு. • இலங்கை தமிழ் அகதிகள் நலனுக்காக 116 கோடி ஒதுக்கீடு. • மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக 466 கோடி ஒதுக்கீடு ஆகிய விஷயங்கள் பாராட்டப்படக்கூடியதாகும். அதே சமயம், சிறுபான்மை மக்களுக்காக குறிப்பிட்டு
தமிழகம்
தமிழகம்
மாணவர் இந்தியா கோரிக்கை ஏற்று சாலை அமைப்பு…
சென்னை.மார்ச்.16., வடசென்னை புளியந்தோப்பு இராமசாமி தெருவில் நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாக இருந்த சாலையால் மக்கள் பல்வேறு அவதிகளை சந்தித்து வந்தனர். மக்களின் இன்னல்களை அறிந்து அப்பகுதியில் வசித்து வரும் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் தீன் "அம்மா புகார் மையம்" தொலைபேசி எண்: 1100 தொடர்பு கொண்டு சாலை இல்லாமல் மக்கள் படும் இன்னல்களை விவரித்து புகாரை பதிவு செய்தார். புகார் எண் : 17011000643 மீது நடவடிக்கை எடுக்க நகராட்சி அதிகாரிகள் மாவட்ட செயலாளர் தீனை தொடர்பு கொண்டு சாலையின் விவரங்களை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். அதனடிப்படையில் நடவடிக்கை எடுத்த நகராட்சி அதிகாரிகள் புதிய சாலை அமைத்து மாவட்ட செயலாளர் தீனை தொடர்பு கொண்டு புகார் எண் : 17011000643 மீது நடவடிக்கை எடுத்து சாலை அமைத்துவிட்ட தகவலை பதிவு செய்தனர். புகார் பதிவு செய்து ஒரு வார காலத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த நகராட்சி அதிகாரிகளுக்கு மாணவர் இந்தியா சார்பாக தீன் நன்றியை தெரிவித்தார். தகவல் : ஊடகபிரிவு. மாணவர் இந்தியா, வடசென்னை மாவட்டம். 16.03.2017 #Maanavar_India
தமிழ் மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணத்துக்கு சி.பி.ஐ விசாரணை தேவை!மனிதநேய ஜனநாயக கட்சி கோரிக்கை!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவராக பயின்று வந்த தமிழகத்தை சேர்ந்த ஜீ.முத்துக்கிருஷ்ணன் அவர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ள செய்தி நாடு முழுக்க அறிவு சார் தளங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. IIT,AIMS உள்ளிட்ட இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் ஃபாஸிஸமும்,ஏகாதிபத்திய போக்குகளும் தலைவிரித்தாடி வரும் நிலையில் இம்மரணமும் பல்வேறு ஐயங்களை உருவாக்கியுள்ளது. எனவே இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை தேவை என்றும்,மனிதாபிமான அடிப்படையில் ஜீ. முத்துக்கிருஷ்ணன் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவண், M.தமிமுன் அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 15_03_17 #MJK_IT_WING
JNU மாணவர் முத்துகிருஷ்ணன் மர்ம மரணம் – மாணவர் இந்தியா கண்டனம்…
புது தில்லி JNU பல்கலைகழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் மர்மமான முறையில் உயிர்ழந்ததின் பின்னணியில் அனைத்து தரப்பினராலும் சந்தேகம் இருப்பதாக கருதப்படுகிறது. ஹைதராபாத் பல்கலைகழக மாணவர் ரோஹித் வேமுலா, எய்ம்ஸ் பல்கலைகழக மாணவர் சரவணன், என மத்திய பல்கலைகழகத்தை சேர்ந்த சிறுபான்மை மற்றும் தலித் மாணவர்கள் தொடர்ந்து மர்மமான முறையில் உயிரிழப்பதும். காணலாம் போய் 4மாதங்கள் ஆகியும் ஜே.என்.யூ பல்கலைகழக மாணவர் நஜிப் அஹமது இது வரையில் என்ன ஆனார் என்று தெரியாத நிலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதை மாணவர் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. உயிரிழந்த முத்துக்கிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில் கடைசியாக பேராசிரியர்களும் சாதி வேறுபாடு பார்ப்பதாகவும், பல்கலைகழக சேர்க்கையில் சம அளவிலான வாய்ப்புகள் பின்பற்றப்பட்டவில்லை என்பதை பதிவு செய்துள்ளார், ரோஹித் வெமுலா படுகொலையை தொடர்ந்து முத்துகிருஷ்ணனின் மர்ம மரணம் பாஜக மற்றும் ஏ.பி.வி.பி அமைப்புகளைச் சேர்ந்த குண்டர்களாக இருக்குமோ என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது. கல்வி பயிலும் மாணவர்கள் மதம் மற்றும் சாதி ரீதியிலான துன்பத்திற்கு ஆளாக்கப்படுவது நாட்டின் ஜனநாயகத்தை கேள்விக்குரியாக்கியுள்ளது. பல்கலைகழக சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும், தற்கொலைக்கான உண்மையான காரணத்தை
நாகை நூலகத்தில் MLA ஆய்வு!
நாகப்பட்டினத்தில் இருக்கும் அரசு நூலகத்திற்கு நாகை சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளையும், அலுவலர்களையும் நேரில் சந்தித்து கலந்துரையாடி தேவைகளை கேட்டறிந்தார். அங்கு வருகை தந்திருந்த வாசகர்களிடம் உரையாடினார். கணிணி பயன்பாட்டை மேம்படுத்துதல், கூடுதல் மின்சார வெளிச்சத்தை உருவாக்குதல், உள்ளிட்ட கோரிக்கைகளை வாசகர்கள் கூறினர். 6 மாதத்திற்குள் உரிய நடவடிக்கைகளை எடுத்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக MLA அவர்கள் வாக்களித்தார்கள். இந்நிகழ்வில் முன்னாள் சேர்மன் மஞ்சுளா, மஜக மாநில துணை செயலாளர் ஷேக் அப்துல்லா, மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், நாகை நகர நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 15.3.17