விழுப்புரம் தெற்கு மாவட்ட மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று “சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி” கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளது.

போராட்டத்தின் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசிக்க விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் J.சௌக்கத் அலி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச்செயலாளரும், மாவட்ட மேலிட பொறுப்பாளருமான நெய்வேலி இப்ராஹிம் கலந்துகொண்டார்.

கூட்டத்தில் மாவட்டத்தின் சார்பாக முன்னெடுக்க வேண்டிய போராட்ட பரப்புரை பணிகள் குறித்தும், முற்றுகை போராட்டத்திற்கு திரளான மக்களை அழைத்து செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

இதில் மாவட்ட துணைச்செயலாளர்
அபுதாகிர், மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்சாரி, இளைஞரணி துணை செயலாளர்கள் மன்சூர் அகமது, அசோக், நகர செயலாளர் பாட்ஷா உள்பட மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

#கோவையில்_திரள்வோம்
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongTermPrisoners

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#விழுப்புரம்_தெற்கு_மாவட்டம்