மதுரை.ஆக.18, மதுரை வடக்கு மாவட்டம் சார்பாக கேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நம் உறவுகளுக்காக மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை வடக்கு மாவட்டம் ஒத்தக்கடை கிளையின் சார்பாக வெள்ள நிவாரண நிதி சேகரிப்பு இன்று நடைபெற்றது. இதில் கிளைச்செயலாளர் பீர் முகம்மது தலைமையில் இன்று மாலை தொடங்கி இரவுவரை கேரள மக்களுக்காக ஒத்தக்கடை பிரதான சாலை, மாட்டுத்தாவணி மத்திய பேருந்து நிலையம், ஆம்னி பேருந்துநிலையம் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் சாலையோர வியபாரிகளிடம் வெள்ளபாதிப்பு நிலைய எடுத்துக்கூறி நிவாரண நிதி திரட்டப்பட்டது. எதிர்பார்த்ததை விட பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு நிவாரண பணிகளுக்கு வாழ்த்துக்கள் கூறிஆர்வமாக நிவாரண நிதிக்கு தங்களது பங்களிப்பை அளித்தனர். இதில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் ஒத்தக்கடை பாரூக், மாவட்ட துணைச்செயலாளர் சசிக்குமார், கிளை நிர்வாகிகள் சக்கரை, கபிலாஷ், பூமிநாதன் மற்றும் மனிதநேய சொந்தங்கள் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_மதுரை_வடக்கு_மாவட்டம் 18-08-18
நிவாரண பணிகளை
வீதி, வீதியாக வெள்ள நிவாரண நிதி திரட்டிய காயல் மஜகவினர்..!
தூத்துக்குடி. ஆக.18., தூத்துக்குடி தெற்கு மாவட்டம் காயல்பட்டினம் நகரம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக. வரலாறு காணாத மழை வெள்ளத்தால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நம் கேரள மக்களுக்காக காயல் நகர் வீதி, வீதியாக நிவாரண நிதி வசூல் செய்யப்பட்டது. மாலை 4மணிக்கு தொடங்கி இரவு 9மணி வரை காயல்பட்டினத்தில் பெரும்பாலான தெருக்களில் நிவாரண நிதி வசூலிக்கப்பட்டது . இதில் அணைத்து மக்களும் தானாக முன்வந்து பெறும் அளவில் தங்களது நிவாரண நிதிகளை வழங்கினர். இதில் ஏதிர்பாரத விதமாக ஒரு வீட்டில் தாங்கள் சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த உண்டியலை நிவாரண நிதியாக வழங்கினர். தலைமை செயற்குழு உறுப்பினர் A.R.சாகுல்ஹமீத் அவர்களின் தலைமையில் நகர பொருளாளர் மீரான், மாவட்ட துணை செயலாளர் முகம்மது நஜிப், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மீராசாகிப், நகர துணை செயலாளர் ஜிப்ரி, நகர நிர்வாகிகள் அப்துல்ரகுமான், சிக்கந்தர்பாஷா, முன்னாள் நகர துணைசெயலாளர் ஜியாவுதீன், மற்றும் மனிதநேய சொந்தங்கள் நிதி சேகரிப்பில் கலந்துகொன்டனர். முதற்கட்டமாக ₹25,300 ரூபாய் வசூலானது. இறைவன் நாடினால் நாளையும் தொடரும். கேரளா மக்களுக்காக வாரி வளங்கிய சொந்தங்களுக்கு இறைவன் நன்மைகளை வாரி வழங்குவானாக. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தூத்துக்குடி_தெற்கு_மாவட்டம்
கம்பம் நகர மஜக சார்பில் வெள்ள நிவாரண நிதி திரட்டும் பணி..!
தேனி.ஆக.18., தேனி மாவட்டம் #கம்பம் நகரம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் கேரளா மக்களுக்கான நிவாரண நிதி மற்றும் பொருட்கள் திரட்டும் பணிகள் கடந்த இரு தினங்களாக நடைபெற்று வருகிறது. #கேரளா இடுக்கி, கோட்டயம் போன்ற நகரங்கள் கடும் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள மக்கள் இந்த மழை வெள்ளப் பெருக்கால் வீடுகளையும், உடைமைகளையும், உறவுகளையும் இழந்து கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இயற்கை பேரிடரில் துன்புறும் கேரள இடுக்கி பகுதி மக்களுக்கு பொருட்களை கொண்டு செல்ல உதவிப் பொருட்களை #கம்பம்_பிஸ்மி_மெடிக்கல்_சாதிக் அவர்கள் வழங்கினர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கம்பம் கரிம், மாவட்ட செயலாளர் ரியாஸ், மாவட்ட துணை செயலாளர் கம்பம் கலில், கம்பம் நகர செயலாளர் அஜ்மீர் மற்றும் கம்பம் இளைஞரணியை சேர்ந்த சபீக்ராஜா, சேக், அனிஸ், ஒலி ஆகியோர் உடன் இருந்தனர். நிவாரனம் வழங்கிய #கம்பம்_அன்பு_தமிழ்_உறவுகளுக்கு மஜக சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_கம்பம்_நகரம் #தேனி_மாவட்டம்
கேரளா பாலக்காட்டில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மஜக நிர்வாகிகள் இரண்டாம் கட்டமாக ஆய்வு..!
கோவை.ஆக.18., கடந்த சில நாட்களாக #கேரளா மாநிலம் தாழ்வான பகுதிகளில் ஏற்ப்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் வீடுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று கேரளா #பாலக்காடு பகுதியில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி கோவை மாநகர் மாவட்ட செயலாளர் MH. அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS. அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் செயலாளர் ஃபைசல், விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அப்பாஸ், பகுதி நிர்வாகிகள் பூ.காஜா, காஜாஉசேன், அப்பாஸ், ரஹ்மத்துல்லா, மற்றும் 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர். பிறகு அங்குள்ள ஜமாத் நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் மக்களின் உடனடி நிவாரண உதவிகள் குறித்து ஆலோசனை செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து முதல்கட்ட நிவாரண பொருட்களை மஜக நிர்வாகிகள் வழங்கினர். கடந்த 11.08.2018 அன்று நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில், கேரளா வெள்ள நிவாரண நிதி முதற்கட்டமாக 10இலட்சம் ரூபாய் அனுப்புவது என்ற அறிவிப்பை மஜக
கேரளா பாலக்காட்டில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மஜக நிர்வாகிகள் ஆய்வு..!
கோவை.ஆக.16., கடந்த சில நாட்களாக #கேரளா மாநிலம் தாழ்வான பகுதிகளில் ஏற்ப்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் வீடுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று கேரளா #பாலக்காடு பகுதியில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி துணை பொதுசெயலாளர் சுல்தான் அமீர், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் மீன் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS. அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் சிங்கை சுலைமான் மற்றும் இளைஞர் அணி செயலாளர் ஃபைசல் ஆகியோர் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர். களபணியில் உள்ள சலபி பள்ளி நிர்வாகிகளுடன் மக்களின் உடனடி நிவாரண உதவிகள் குறித்து ஆலோசனை செய்தனர். கடந்த 11.08.2018 அன்று நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில், கேரளா வெள்ள நிவாரண நிதி முதற்கட்டமாக 10இலட்சம் ரூபாய் அனுப்புவது என்ற அறிவிப்பை மஜக வெளியிட்டது என்பது குறிப்பிடதக்கது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_வெள்ள_நிவாரண_பணிக்குழு.