தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் ஆணைய தலைவர் திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர், இணைப் பொதுச் செயலாளர் JS.ரிபாயி, மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன், மாநில துணை செயலாளர் நாகை முபாரக் ஆகியோர் சந்தித்தனர். அப்போது தமிழக சிறைகளில் சமூக வழக்குகளில் கைதாகி 10 வருடங்களை தாண்டி 20 வருடங்களுக்கும் மேலாக வாடி வரும் முஸ்லிம் கைதிகளின் முன் விடுதலை மற்றும் அவர்களின் மனித உரிமைகள் குறித்த மனு ஒன்றையும் பொதுச் செயலாளர் கையளித்து விளக்கி கூறினார். மேலும் அவர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடுவதால், அவர்கள் தொழில் தொடங்கவும், வருமானம் ஈட்டவும் உரிய வழி வகைகள் குறித்து ஆணையம் சார்பில் உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும் சென்னை IIT-யில் ஈராண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட கேரள மாணவி பாத்திமாவின் மர்ம மரணம் குறித்தும், அங்கு காட்டப்படும் சாதிய - மதவாத பாகுபாடுகள் குறித்தும் விசாரிக்க மற்றொரு மனுவும் மஜக சார்பில் கொடுக்கப்பட்டது. இச்சந்திப்பில் மத, மொழி சிறுபான்மையினர் சந்திக்கும் பல பிரச்சனைகளும் விவாதிக்கப்பட்டது. தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 11.08.2021
பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி
நலன் விசாரிப்பும் சந்திப்பும்… ஹைதர்அலி பாக்கர் ஆகியோருடன் மஜக பொதுச்செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் சந்திப்பு..
வக்பு வாரிய முன்னாள் சேர்மனும், மூத்த தலைவர்களில் ஒருவருமான சகோ.ஹைதர் அலி அவர்களை இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன் மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன், மாநில துணைச் செயலாளர் நாகை. முபாரக், இளைஞர் அணி செயலாளர் அசாருதீன், மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர் அகமது ஆகியோரும் உடன் சென்றனர். கொரோனா பாதிப்புக்கு பின்பு தற்போது நலம் பெற்று பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார். அது போல் INTJ அலுவலகத்திற்கு சென்று அதன் தலைவர் S.M.பாக்கர் உள்ளிட்ட நிர்வாகிகளை பொதுச் செயலாளர் சந்தித்து பேசினார். அப்போது மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர் அவர்களும் உடனிருந்தார். இச்சந்திப்புகள் இரண்டும் மகிழ்வும், நெகிழ்வும் கொண்டதாக இருந்தது. தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #மத்திய_சென்னை 10.08.2021
முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் மஜக பொதுச்செயலாளருடன் சந்திப்பு…
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் அபுபக்கர் அவர்கள், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களை சந்தித்து மணிச்சுடர் சிறப்பு மலரை கையளித்தார். அப்போது மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன் அவர்களும் உடனிருந்தார். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING சென்னை 09.08.2021
ஏனங்குடியில் மஜக இல்ல திருமணம்! பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வாழ்த்து!
மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆதலையூர் கிளை நிர்வாகி M.முகம்மது ஜாஸிம் B.Tech அவர்களுக்கும் மணமகள் M.சேஹா ஃபர்ஹத B.Tech அவர்களுக்கும் இடையில் இன்று திருமணம் நடைபெற்றது. மண விழாவில் பங்கேற்று மணமக்களை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வாழ்த்தினார். இந்நிகழ்வில், மஜக மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ், பொருளாளர் சதக்கத்துல்லாஹ், மாவட்ட துணை செயலாளர் அஹமதுல்லாஹ் உள்ளிட்டோரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இதில் மாவட்ட துணைச் செயலாளர் முன்ஷி யூசுப்தீன், திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன், MJVS மாவட்ட பொருளாளர் பேபிஷாப் பகுருதீன், MJTS மாவட்ட துணைச் செயலாளர் முத்து, IT WING துணைச் செயலாளர் நிசாத், ஒன்றிய துணை செயலாளர் பாவா மற்றும் ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம்.
மனசாட்சி நட்புக் கரங்கள் நிகழ்வு… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு…!
மனசாட்சி நட்புகரங்கள் டிரஸ்ட் சார்பாக, சாலையோரங்கள், பஸ்/ ரயில் நிலையங்கள், வீதி திண்ணைகளில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு போர்வைகளும், குடிசை வீடுகளில் வசிக்கும் நலிவடைந்தோருக்கு தார்ப்பாய்களும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டுக்கான சேவை இன்று நாகை மாவட்டம் தோப்புத்துறையில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி Ex.MLA அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. ஆதரவற்ற, வசதியில்லாதவர்களுக்கு தார்பாய்கள் மற்றும் போர்வைகளை நேரடியாக சென்று வழங்கும் திட்டத்தின் சேவையினை திருமிகு. மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு போர்வைகளும், தார்பாய்களும் வழங்கினார். அதேபோல், உடல் உறுப்பு தானத்தை, செம்போடை நேதாஜி மருத்துவமனையின் நிறுவனர், மருத்துவர் V.G.சுப்ரமணியன் MBBS, MD அவர்கள் தொடங்கி வைத்தார்.. முதல் உடல் உறுப்பு தானத்தை, நாலுவேதபதி K.ராஜேந்திரன் அவர்கள் வழங்கி, துவக்க விழா சான்றிதழை பெற்றுக் கொண்டார்.. மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் நிறுவனர் R.சம்பத்குமார் அவர்கள், தலைமை ஒருங்கிணைப்பாளர் N.பாலமுரளி அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், மாநில ஒருங்கிணைப்பாளர் S.முருகையன் அவர்கள் நன்றியுரைற்றினார். இதில், மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை மாவட்ட துணை செயலாளர் ஷேக் அஹ்மதுல்லா மற்றும் மனசாட்சி