வரலாறு காணாத மீனவர் நிவாரண நிதி .!

60 லட்சம் பெற்று தந்து மீனவர்களின் துயர் துடைத்த நாகை MLA

ஜுலை 12  அன்று நாகப்பட்டினம் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகையை சேர்ந்த ஒரு மீன்பிடி படகு மீது , காரைக்கால் மார்க் துறைமுகத்திற்கு சரக்கு ஏற்றிவந்த கொரிய கப்பல் மோதியதில் படகு உடைந்து 7 மீனவர்கள் பாதிக்கப்பட்டனர் .

இச்செய்தி அறிந்ததும் உரிய நஷ்ட ஈடை பெற்றுத்தருமாறு #மஜக பொதுச் செயலாளரும் , நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான M.#தமிமுன்_அன்சாரி அவர்களிடம் கோரிக்கை வைத்ததோடு , அது குறித்த பேச்சுவார்த்தைக்கும் வருமாறு வேண்டுகோள் விடுத்தனர் . இதில் அரசியல் பேதமின்றி பல கட்சிகளை சேர்ந்த மீனவர் பஞ்சாயத்தினர் ஒன்றுபட்டு செயல்பட்டனர் .

ஜூலை 13  அன்று காரைக்கால் மார்க் துறைமுக அலுவலகத்தில் அதனுடைய மேலாளர் ரெட்டி , நாகை சட்டமன்ற உறுப்பினர் M.#தமிமுன்_அன்சாரி , மீனவர் கிராம தலைவர்கள் , RDO என அனைவரும் பங்கேற்ற பேச்சுவார்த்தை இரண்டு முறை நடைபெற்றது .

அப்போது உடைந்த இரும்பு படகுக்கு நஷ்ட ஈடாக கொரிய கப்பல் நிறுவனம் 60 லட்சம் ரூபாயும் , காயமடைந்த மீனவர்களுக்கு தலா 5 லட்சமும் வழங்க வேண்டும் என மீனவர்களின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் M.#தமிமுன்_அன்சாரி கோரிக்கை வைத்தார் .

பேச்சுவார்த்தையில் #MLA உறுதிகாட்டியதால் , கப்பல் நிறுவனமும் , ஏஜென்சியும் இறங்கி வந்தனர் . கடைசியாக பழுதடைந்த படகுக்கு 40 லட்சமும் , உடல் பாதிக்கப்பட்ட 6 மீனவர்களுக்கு தலா 2 ½ லட்சமும் , அதிக காயமடைந்த ஒரு மீனவருக்கு 5 லட்சமும் நிவாரணம் தர ஒப்புக்கொண்டது .

கடந்தவாரம் சட்டசபை நிகழ்ச்சிகளில் #MLA அவர்கள் சென்னையில் இருந்த நிலையில் , RDO மூலம் மீனவர்களுக்கு 60 லட்சம் பணம் கப்பல் நிறுவனம் மூலம் பெற்றுக் கொடுக்கப்பட்டது .

இதுபோல பல விபத்துக்கள் கடலில் நிகழ்ந்துள்ள நிலையில் , மிகப்பெரிய நஷ்ட ஈட்டு தொகை இப்போதுதான் மீனவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது என மீனவர்கள் நெகிழ்ந்தனர் .

இம்முயற்சியில் பங்கேற்று மீனவர்களுக்கு பேருதவி ஆற்றியதற்கு மீனவர்கள் நாகை சட்டமன்ற உறுப்பினர் M.#தமிமுன்_அன்சாரி அவர்களுக்கு, கட்சி பேதமின்றி நன்றி தெரிவித்துக் கொண்டனர் .

தகவல் ;

நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
30-07-2016