குடியுரிமை சட்ட ஆபத்துகளை விளக்கும் “முகாம்”

குடியுரிமை கருப்பு சட்டங்களினால் ஏற்படப்போகும் அபாயங்கள் குறித்து உயிரோட்ட மிக்க நாவலை தோழர் அ.கரீம் அவர்கள் “முகாம்” என்ற பெயரில் எழுதியுள்ளார்.

அவரது இந்நூல் அறிமுக நிகழ்ச்சி சென்னை திருவல்லிக்கேணியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது.

இதில் பேசிய மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள், குடியுரிமை கருப்பு சட்டங்களால் ஏற்பட போகும் சீரழிவுகள் குறித்து விரிவாக பேசினார். குடியுரிமை கருப்பு சட்டங்களின் அபாயங்களை இந்த நாவலில் சுட்டி காட்டியமைக்காக நூல் ஆசிரியருக்கு பாராட்டுக்களை கூறினார்.

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பேசும் போது. அரசியல் இல்லாத இலக்கியம் தேவையற்றது என்றும், அது போன்ற இலக்கியங்களை ஊக்குவிப்பவர்களை கொண்டாடக் கூடாது என்றும் பேசினார். இந்நூல் சமகால அரசியலை கூறுகிறது என்றும் பாராட்டினார்.

பேராசிரியர் மஞ்சுளா அவர்கள் பேசும் போது. இந்நாவலின் கதாபாத்திரங்களை விளக்கி கூறி, குடியுரிமை கருப்பு சட்டங்கள் எவ்வளவு பேராபத்துகளை உருவாக்கக்கூடியது என்பதை எடுத்துக் கூறினார்.

நூலாசிரியர் கரீம் அவர்கள் பேசும்போது. குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்ற போது, திருச்சி பத்திரிக்கையாளர் சந்திப்பில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள், எங்களுக்கு ஆதரவாக எல்லோரும் வரமாட்டார்களா? என கண்கலங்கிய நிகழ்வை சுட்டிக்காட்டினார். அதுதான் இந்நாவலை எழுத தூண்டியதாகவும் கூறினார்.

இந்நிகழ்வை வழக்கறிஞர் பெரோஸ் கான் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்வில் மாநில செயலாளர்கள் புதுமடம் அனீஸ், பல்லாவரம் ஷஃபி, மாநில துணை செயலாளர் அஸாருதீன், மாணவர் இந்தியா தலைவர் பஷீர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாம்பரம் தாரிக், மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மில்லாகான், வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் இஸ்மாயில், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட துணை செயலாளர் ஹாஜாமைதீன், திருவல்லிக்கேணி-ஐஸ்ஹவுஸ் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.