இந்தியாவின் 75 வது சுதந்திர தின பவள விழா மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தமிழகமெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மரக்கன்றுகள் விநியோகம், ரத்த தான முகாம்கள், மருத்துவ முகாம்கள், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பழங்கள் வழங்குதல், ஆதரவற்றவர்களுக்கு உணவிடுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என மஜகவினர் சுதந்திர தின பவள விழாவை தேசிய கொடியேற்றி கொண்டாடி வருகின்றனர். இன்று காலை தோப்புத்துறையில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தேசிய கொடி ஏற்றினார். அப்போது உறுதி மொழி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பிறகு தேசிய கீதம் பாடப்பட்டது. பிறகு அனைவருக்கும் சந்தனம், செம்மரம், நெல்லி மரக்கன்றுகள் வழங்கி மஜகவினர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். முக்கிய சேவகர்களுக்கு சிறப்பு மரியாதையும் செய்யப்பட்டது. கொரோனாவில் ஆதரவற்றவர்களுக்கு பணியாற்றிய ஈகா தர்ம ஸ்தாபன நிர்வாகி R.மோகன ராஜசேகரன், கொரணாவில் மருத்துவ பணியாற்றிய ஜலால், சதாம், இம்தியாஸ் ஆகியோருக்கு சால்வை அணிவித்து பொதுச் செயலாளர் சிறப்பு செய்தார். இந்நிகழ்வுக்கு மாவட்ட துணைச் செயலாளர் அகமதுல்லா தலைமை தாங்கிட, தலைமை செயற்குழு உறுப்பினர் ஷேக் மன்சூர், நகரச் செயலாளர் முகம்மது ஷெரிப் , ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக ஜமாத் தலைவர்
பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி
விவசாய பட்ஜெட் பருவகால மழை! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை!
இந்தியாவே உற்று நோக்கும் வகையில் விவசாயத்திற்கென தனி நிதி நிலை அறிக்கையை வேளாண்துறை அமைச்சர் மாண்புமிகு திரு M.R.K.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருக்கிறார். விவசாயத்திற்கென இத்தகைய தனி நிதி நிலை அறிக்கை தேவை என மனிதநேய ஜனநாயக கட்சி ஆரம்பம் முதலே வலியுறுத்தி வந்தது. அந்த அடிப்படையில் நாங்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறோம். இந்த நிதி நிலை அறிக்கையில் தரிசு நிலங்கள் பரிசு நிலங்களாக மாற்றப்படும் என்ற நம்பிக்கை விதை ஊன்றப்பட்டிருக்கிறது. இயற்கை விவசாயம், பாரம்பர்யம் மர வளம்,சுற்றுச்சூழல், நீர் வளம், மின் வினியோகம், அதிக உற்பத்தி, லாபகரமாக சந்தைப்படுத்துதல் என நிதி நிலை அறிக்கை உற்சாகமளிக்கும் வகையில் இருக்கிறது. நெல், கரும்பு, தென்னை, பருத்தி, பனை, மா, பலா, வாழை ,சிறு தானியங்கள், காய்கறிகள், பூக்கள் என பல்வகை விவசாய நலன்களும் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது. இயற்கை வேளாண்மை வளர்ச்சி திட்டம், வேளாண்மையை இயந்திரமயமாக்குதல், பனை மேம்பாட்டு இயக்கம், உழவர் சந்தைகள் மேம்பாடு, வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோராக்குதல், படித்த இளைஞர்களை சொந்த ஊர்களில் விவசாயத்தில் ஈடுபடுத்தும் திட்டம் என பருவ கால மழையில் நனைந்தது போன்ற உணர்வை
மத நல்லிணக்கம் காத்த பெருந்தகை மதுரை ஆதினம்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இரங்கல்!
மதுரை ஆதினம் என்று அன்போடு அழைக்கப்பட்ட அருணகிரிநாதர் இன்று மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த வேதனையடைகிறோம். சிறந்த ஆன்மீக வாதியாக திகழ்ந்த அவர், அரசியல் அரங்கிலும் கவனம் பெற்றவராய் வலம் வந்தார். அவரது தமிழ் மொழி மீதான பற்றும், தமிழினத்தின் மீதான அக்கறையும் அவரை ஆன்மீகத்தையும் கடந்து அனைவரையும் நேசிக்க வைத்தது. அவரது தமிழும், ஆங்கிலமும் கலகலப்பான மொழி நடையாக அனைவரையும் வசீகரிக்கும். மத நல்லிணக்கத்தை வளர்ப்பதிலும், பிற மதத்தினரை கொண்டாடுவதிலும் சமகாலத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. அப்துல் சமது சாஹிப், அப்துல் லத்தீப் சாஹிப், ஷஹீத் பழனிபாபா, நாகூர் அனிபா, ஆகியோரோடு அவர் கடைப்பிடித்த தோழமை கற்கண்டுக்கு இணையானது. தங்கள் ஆதினத்திற்கு முகலாய மன்னர் ஒளரங்கசீப், நிலங்களை தானமாக தந்ததை பெருமையோடு பரப்புரை செய்து, மத நல்லிணக்கம் வளர அரும்பாடுபட்டவர். இந்து மதத்தின் சிறப்புகளை சிலாகிக்கும் அவர், திருக்குர் ஆனின் முதல் அத்தியாயமான அல்- பாத்திஹா வை மனனம் செய்து, பல மீலாது மேடைகளில் மகிழ்ச்சிப் பொங்க எடுத்துக் கூறுவார். அவர் மத நல்லிணக்கம் காத்த பெருந்தகையாளர். அன்னாரைப் போன்ற ஆன்மீக தலைவர்கள் தீவிரமாக இயங்க வேண்டிய ஒரு காலக்கட்டத்தில் அவரை நாம்
நெருக்கடியான சூழலில் மகிழ்ச்சி தருகிறது!தமிழக அரசின் பட்ஜெட் குறித்து! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வரவேற்பு!
தமிழக அரசின் 2021-22 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் PTR.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று சட்டப்பேரவையில் சமர்ப்பித்திருக்கிறார். கொரோனா காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கும் இக்காலகட்டத்தில் மிகுந்த பொறுப்புணர்வுடனும், நுட்பத்துடனும், முன்னோக்கு பார்வையுடனும் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் சார்பில் பெட்ரோல் வரியாக முதல் கட்டமாக 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. தமிழகத்திற்கு என புதிய கல்விக் கொள்கை வகுக்கப்படும் என்ற அறிவிப்பு நம்பிக்கையூட்டுகிறது. கல்விக்காக 77. 88% நிதி ஒதுக்கீடு செய்திருப்பது ஒரு தூர நோக்கு பார்வையாகும். உணவுக்கான மானியம் 8,437.57 கோடியாக உயர்த்தி இருப்பது, 10 புதிய கலை- அறிவியல் கல்லூரிகள் வெவ்வேறு நகரங்களில் அமைக்கப்படவிருப்பது, பரவலாக 4 புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்பட விருப்பது, அரசு பெண் ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு 12, மாதங்களாக உயர்த்தப்பட்டு இருப்பது, மீனவர்கள் நல மேம்பாட்டிற்காக 1,149 கோடி ஒதுக்கியிருப்பது, அடுத்த 10 ஆண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என திட்டமிட்டிருப்பது, கீழடியில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது, நந்தம்பாக்கத்தில் 165 கோடியில் நிதி நுட்ப நகரம் அமைக்கப்படவிருப்பது, சென்னை
சென்னை மண்டல நிர்வாகிகளுடன் சந்திப்பு… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு..!
சென்னை மண்டலத்திற்குட்பட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்வு தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று, நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அவருடன் மாநிலச் செயலாளர்கள் நாச்சிக்குளம். தாஜ்தீன், சீனி முகம்மது ஆகியோரும், மாநில துணைச் செயலாளர் பல்லாவரம் ஷஃபி, இளைஞரணி மாநில செயலாளர் அசாருதீன், மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர், மருத்துவ சேவை அணி செயலாளர் அப்துல் ரஹ்மான் ஆகியோரும் உடனிருந்தனர். செங்கல்பட்டு வடக்கு, செங்கல்பட்டு தெற்கு, திருவள்ளுர் கிழக்கு, மத்திய சென்னை கிழக்கு, மத்திய சென்னை மேற்கு ஆகிய மாவட்டங்களின் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று கட்சி பணிகள் குறித்து எடுத்து கூறினர். அடுத்த 3 மாதங்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், மாவட்ட பொதுக் குழுக்கள் நடத்துவது குறித்தும் பொதுச் செயலாளர் எடுத்து கூறினார். விரைவில் சென்னை மண்டல மாவட்டங்களின் செயற்குழு நடைபெறும் என்றும் அதில் கட்சி பணிகள் குறித்த அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்றும் கூறினார். அடுத்து வட சென்னை, தென் சென்னை மாவட்ட சந்திப்பு நடைபெறும் என்றும் கூறினார். இந்த கலந்துரையாடல் மிகவும் உற்சாகமாக இருந்ததாக மாவட்ட நிர்வாகிகள் கூறினர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தலைமையகம் 11.08.2021