You are here

சென்னை மிரண்டது! மஜக பொதுக்கூட்டம் மாபெரும் வெற்றி!

image

image

நவ.05., நேற்று (04/11/2016) சென்னை மண்ணடியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பொதுசிவில் சட்டம் கொண்டு வரத் துடிக்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து “சமூக நீதிக்கான பொதுக்கூட்டம்” மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது.

இதில் M.தமிமுன் அன்சாரி, தொல்.திருமாவளவன், S.S.ஹாரூண் ரஷீத், டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மது, மெளலவி சம்சுதீன் நாசர் உமரி, தாவுத் மியாக் கான், அடையாறு இமாம் மெளலவி சதீதுத்தீன் பாகவி, N.A.தைமிய்யா  உள்ளிட்டோர் உரையாற்றினர்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்த பொதுமக்கள் திரண்டதால், 7 மணியளவில் பாரிமுனை முழுக்க போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 8 மணியளவில் தம்புச்செட்டித் தெருவில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். அம்பாள் பிரஸ் தொடங்கி மெட்ரோ பேலஸ் தாண்டியும் கூட்டம் நீண்டது. சாலையின் இருபுறங்களிலும்  இடம் கிடைக்காமல் மக்கள் நின்றபடியே நிகழ்ச்சிகளைப் பார்த்தனர்.

ஜமாத்தார்கள், பெண்கள், இளைஞர்கள், பிற சமுதாய சகோதரர்கள் என கூட்டம் பன்முகத்தன்மையோடு இருந்தது.

தலைவர்களின் ஆவேச, அர்த்தமுள்ள உரைகளை கேட்டு கூட்டம் ஆர்ப்பரித்தது!

சென்னையில் மஜக மத்திய அரசை மிரட்டியிருக்கிறது. விரைவில் இது தமிழகம் முழுக்க பரவும்!

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

தகவல்;
மஜக ஊடகப்பிரிவு(சென்னை)

Top