இன்று சென்னை பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய படிப்பக மையம் சார்பில் பொதுசிவில் சட்டம், மற்றும் தலாக் குறித்த கலந்துரையாடல் நடைப்பெற்றது.
பல்வேறு மத நம்பிக்கையாளர்கள், கடவுள் மறுப்பாளர்கள், இடது சாரிகள், முற்போக்காளர்கள், பெண்கள், அரசியல் தலைவர்கள் என பல களங்களிலிருந்தும் அறிவுஜீவிகளும், செயல்பாட்டார்களும் வருகை தந்திருந்தனர்.
பேரா. வசந்தி தேவி, பாத்திமா முசப்பர், எழுத்தாளர் சல்மா, வழக்கறிஞர் கீதா, பர்வீன் பாப்பா, ஓவியா உள்ளிட்ட பெண் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
மஜக பொதுச்செயலாளர்
M. தமிமுன் அன்சாரி,
தாவுத் மியான்கான்,
T.S.S மணி, பத்திரிக்கையாளர் குமரேசன், ஆவணப்பட இயக்குனர் அன்வர், முஸ்லிம் லீக் சார்பில் நிஜாம், INTJ சார்பில் இக்பால், IFT சார்பில் சிக்கந்தர், தோழர் மணிவண்ணன் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டு மாறுபட்ட கருத்துகளை ஆரோக்கியமான முறையில் பரிமாறினர்.
ஜனநாயக களத்தில் அவரவர் பார்வையில், கோணத்தில் சிறப்பான முறையில் பேசிட
சென்னை பல்கலைகழக இஸ்லாமியக் ஸ்டெடி சென்டர் சார்பில் பேரா. அப்துல் ரஹ்மான் ஏற்பாடு செய்ததை அனைவரும் பாரட்டினர்.