எல்லா புகழும் இறைவனுக்கே!

எல்லா_புகழும்_இறைவனுக்கே!

பேரன்புக்குரிய சகோதர சகோதரிகளே…..

ஏக இறைவனின் அமைதியும், சமாதானமும் உரித்தாகுக!

பொதுசிவில் சட்டம் குறித்து தந்தி தொலைக்காட்சியில் நான் பங்கேற்ற நிகழ்வு ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர முடிகிறது. நிகழ்ச்சி ஒளிபரப்பாகி ஒரு வாரம் ஆகியும் அது உயிரோட்டத்தோடு மக்களிடம் பேசப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.

ஜமாத்தினர், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், சகோதர சமுதாய சகோதரர்கள் என பல தரப்பினரும் தொடர்புக் கொண்டு பாராட்டுகிறார்கள்.

தலாக் குறித்து சமுதாயத்தில் விழிப்புணர்வையும், பிற சமூக மக்களிடம் புரிதலையும், மிக முக்கியமாக நல்லிணக்க அணுகுமுறைகளையும் எனது கருத்துகளில் வெளிப்படுத்தியிருப்பதாக வரும் செய்திகள் மன நிறைவளிக்கிறது.

அந்த நிகழ்வில்  பங்கேற்பதற்கு முன்பாக, இது குறித்து ஆழமான ஆய்வுகளில் ஈடுபட்டேன். நண்பர்களிடம் கருத்துக்களையும் உள்வாங்கினேன். அதன் பலன் சமூகத்திற்கு பயனளித்திருக்கிறது.

தமிழகத்தில் சமீப காலத்தில் வேறு எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் பெறாத வரவேற்பை இந்நிகழ்ச்சி பெற்றிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

சமூக இணைய தளங்களில் அதிகமாக பகிரப்பட்டிருக்கிறது.

இது குறித்து சிறப்பான பங்களிப்பை உரிய வகையில்; உரிய நேரத்தில்; உரிய ஊடக களத்தில் செய்ததற்காக பாராட்டுகிறார்கள்.

சிலர் அன்பின் மிகுதியாலும், உணர்ச்சி பெருக்காலும் சற்று அதிகமான வார்த்தைகளில் புகழ்ந்திருக்கிறார்கள். அது ஆரோக்கியமல்ல என்பதை சுட்டிக்காட்ட வேண்டிய கடமையும், உரிமையும் எனக்குண்டு. நிதானமாக செயல்பட வேண்டிய பொறுப்புணர்வை உணர்கிறேன்.

நான் ஒரு ஊழியன். என் கடமையை செய்திருக்கிறேன். அவ்வளவு தான். இந்நிகழ்வு மூலம் கிடைத்த பாராட்டுகளை, இரவு பகலாய் களத்தில் உழைக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் கரங்களில் சமர்ப்பிக்கிறேன்.

இறைவனின் உதவி மற்றும் வெற்றி வரும்போது, இறைவழியில் மக்கள் கூட்டம் கூட்டமாக இணையும் போது, இறைவனை அதிகமாக புகழுங்கள். ( அல்குர்ஆன் 110 – 123)

#எல்லாப்_புகழும்_இறைவனுக்கே!

அன்புடன்,
உங்களில் ஒருவன்

M.தமிமுன் அன்சாரி M.L.A.,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.