எங்கள் இதயங்களை உடைத்து_விடாதிர்கள்! நாமக்கல்லில் மஜக பொதுச்செயலாளர் உரை…

image

image

நாமக்கல்லில் ஷரியத் பாதுகாப்பு கமிட்டியின் சார்பில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான போராட்டம் எழுச்சியுடன் நடைப்பெற்றது.

இதில் பல்வேறு சமூகதலைவர்களுடன், மஜக பொதுச்செயலாளர்
M.தமிமுன் அன்சாரி MLA, முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் அபுபக்கர் MLA, SDPI தலைவர் தெஹ்லான் பாகவி, பாப்புலர் பிரண்ட் தலைவர் இஸ்மாயில், தமுமுக சார்பில் தர்மபுரி சாதிக் மற்றும் ஜமாத்துல் உலமா மாநில துணைத் தலைவர் அபுல் கலாம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதில் தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது….

நாம் யாருக்கும் எதிராகவும் கூடவில்லை, யாரையும் அச்சுறுத்துவதற்காக திரளவில்லை. இந்தியாவின் ஜனநாயகத்தையும், பன்மை தன்மையையும் காப்பாற்ற கூடியுள்ளோம். ஒவ்வொறு சமூகத்திற்க்கும் மொத்தம்
தனியே 300 சிவில் சட்டங்கள் உண்டு. அதில் முஸ்லிம்களுக்கு திருமணம், விவாகரத்து, சொத்துரிமை, வக்பு வாரியம் ஆகிய நான்கு விஷயங்களுக்கு மட்டுமே தனிச்சட்டம் உள்ளது. பிற விஷயங்களில் எல்லோருக்கும் உள்ள சட்டங்கள் முஸ்லிம்களையும் பின்பற்ற செய்கிறது.

அம்பேத்கார் ஒரு பொதுவான அனைவரும் ஏற்ககூடிய சமூக அமைப்பு உருவான பிறகுதான் பொதுசிவில் சட்டம் நிறைவேற்றுவது குறித்து பேசியிறுக்கிறார். அரசியல் சட்டத்தின் கொள்கை விளக்க தலைப்பில் 44 வது சட்டம் பற்றி பேசுவதாக கூறிகிறார்கள். ஆனால் 37 வது பிரிவு அதுபற்றி எந்த நீதிமன்றமும் வலியுறுத்த முடியாது என்கிறது.

இந்துகளுக்கு சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தனிச்சட்டங்கள் உண்டு. அதுபோல முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் பல நாடுகளிலும் அவர்களுக்கு தனிச்சட்டங்கள் உண்டு.

இதன் நோக்கம் பிற சமூக மக்களின் தனி கலாச்சாரங்களை பின்பற்ற வழி செய்வதுதான்.

இங்கே நாமக்கல்லில்  திப்பு சுல்தான் கட்டிய கோட்டையின் அடிவாரத்தில் கூடி நின்று முழங்குகிறோம். அவர் தனது  அரண்மனை வளாகத்தில் இருந்த கோயிலில் பூஜைகள் தொடர்ந்து நடைபெற உதவி செய்தார்.
மாராட்டிய பிராமணர்களால் கொள்ளையிடப்பட்ட சிருங்கேரி மடத்திற்குரிய சிலைகளை மீட்டு, சங்கராச்சாரியிடம் ஒப்படைத்தார்.

அப்படி மதச்சார்பின்மையை போற்றிய திப்பு மற்றும் காந்தியடிகளின் கனவுகளை  இந்நாட்டில் சிதைத்து விடாதிர்கள். எங்கள் இதயங்களை உடைத்து விடாதிர்கள்.  நாட்டின் ஒற்றுமையை குலைத்து விடாதிர்கள் என்று பிரதமர் மோடியை கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு பேசினார்.

தகவல்:
மஜக ஊடகப் பிரிவு
நாமக்கல்.