போபால் என்கெளண்டர் படுகொலை! நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை)

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் சிறையிலிருந்து 8 முஸ்லிம் கைதிகள் தப்பித்து சென்றதாக கூறி,அவர்கள் அனைவரையும் போலீசார் போலி என்கெளண்டரில் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.

ஜனநாயக நாட்டில் நீதிமன்ற நிர்வாக முறையை வெடிவைத்து தகர்க்கும் அரச வன்முறையாக இதனை குற்றம் சாட்டுகிறோம்.

அந்த 8 பேரும் கடந்த 8 வருடங்களாக விசாரணைக் கைதிகளாக இருந்த நிலையில், நீதிமன்ற தீர்ப்புக்கு முன்பாகவே அவர்கள் சட்டவிரோதமாக கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்.

இதற்கு மத்திய பிரதேச பாஜக அரசு தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும்.இது குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

தொடர்ந்து மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள்,தலித்துகள்,முஸ்லிம்கள் என்கெளண்டரில் கொல்லப்படுவது நாட்டில் சகஜமாகி வருகிறது. இந்த அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உச்சநீதிமன்றம் நீதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
1_11_16