நெல்லை.நவ.23., கடந்த 19-11-2017 அன்று மேலப்பாளையம் வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமீமுன் அன்சாரி எம்.ஏ. எம்.எல்.ஏ அவர்கள் மாவட்ட செயளாலர் A.கலீலுர் ரஹ்மான் தலைமையில் மேலப்பாளையத்தில் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டி செயல்பட்டுவரும் டிப்டாப் தமிழன் என்ற தன்னார்வ தொண்டர்கள் குழுவின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரம் நடும் நிகழ்ச்சிக்கு வருகைதந்து, மரங்களை நட்டுவைத்து அந்த குழுவினர்களுக்கு வாழ்த்துகளையும். மகிழ்ச்சிகளையும் தெரிவித்தார். நிகழ்சில் மாநில மாவட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்ப்பாடுகளை டிப்பாப் தமிழன் குழுவின் நிர்வாகி முஜாஹித் சிக்கி செய்திருந்தார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நெல்லை_கிழக்கு_மாவட்டம்
மஜக சுற்றுச்சுழல் அணி
மஜக சுற்றுச்சுழல் அணி
சாக்கடைகளை தூர் வாரி மேல்தளம் அமைக்கக்கோரிக்கை..! கோவை மாவட்ட ஆட்சியரிடம் மஜகவினர் மனு..!!
கோவை.நவ.13.,கோவை மாநகராட்சி 86வது வார்டு செல்வபுரம் கல்லாமேடு பகுதியில் சாக்கடை மேல் தளங்கள் உடைந்து பாம்புகள் வருவதாகவும் ஒரு ஆண்டிற்கும் மேலாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என சில நாட்களுக்கு முன் சமூக வலை தளங்களில் செய்தி வந்தது. அதை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) நிர்வாகிகள் அந்த பகுதியை பார்வையிட்டு அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். அதன் தொடர்ச்சியாக இன்று 86வது வார்டு செயலாளர் அரபாத் அவர்களின் தலைமையில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹீம், 77வார்டு செயலாளர் இப்ராஹிம், துணைசெயலாளர் அலி, இப்ராஹீம், 78 வது வார்டு நிர்வாகிகள் சுபேர், இத்ரீஸ் ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து சாக்கடைகளை தூர்வாரி மேல் தளங்கள் அமைக்கக்கோரி மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்டஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்! தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 13.11.17
நீர் நிலைகளில் பரவியுள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் மஜக வினர் மனு..!
கோவை.அக்.31., கோவை மாவட்டத்தில் கடுமையாக நிலத்தடி நீர் அடியோடு வற்றி தண்ணீர் பற்றாக்குறை கடந்தகாலங்களில் ஏற்பட்டது, தற்போது மழையின் காரணமாக கோவையில் அனைத்து குளங்களும் நிரம்பிவருகிறது ஆனால் அந்த குளங்களில் ஆகாயத்தாமரை பரவியுள்ளதால் நீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது, ஆகவே இது குறித்து கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட சூற்றுச்சூழல் அணி செயலாளர் A.K.முஹம்மது சலீம் அவர்கள் தலைமையில் குளங்களில் பரவியுள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றக்கோரி கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது, மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார், இந்நிகழ்வில் மாவட்ட துணைசெயலாளர் ரபீக், மருத்துவ அணி மாவட்ட துணை செயலாளர் செய்யது இப்ராஹீம் மற்றும் பகுதி நிர்வாகிகள் சமீர், அபு, கமால் பாஷா ஆகியோர் கலந்துகொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 30.10.17
கோவையில் தொற்றுநோய் பாதிப்பு அபாயம்..! மாநகராட்சி அதிகாரிகளிடம் மஜக முறையீடு..!!
கோவை.அக்.23., கோவை மாநகராட்சிக்குட்பட்ட 75வது வார்டு பூங்கா நகர் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக குப்பைகள் அகற்றப்படாமல் இருந்ததால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட சுற்றுசூழல் அணி செயலாளர் A.k.முஹம்மது சலீம் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் ரபீக், மருத்துவ அணி மாவட்ட துணை செயலாளர் செய்யது இப்ராஹீம் மற்றும் மஸ்ஜித் இக்லாஸ் பள்ளி நிர்வாகிகள் முபாரக், , சமீர், சித்திக் மற்றும் மஸ்ஜிதுல் ஹூதா நிர்வாகிகள் ஜெய்னுல் ஆபிதீன் மற்றும் மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து சுமார் 1டன் குப்பைகளை அகற்றினர். மேலும் இந்த பகுதியின் வழியாக சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட பள்ளிக்குழந்தைகள் செல்வதால் குப்பைகள் தேங்காமல் அப்புறப்படுத்துமாறு அதிகாரிகளிடம் முறையிட்டனர். மேலும் அதிகமான புதிய குப்பை பெட்டிகளும் வைக்க கேட்டுக்கொள்ளப்பட்டது, கோரிக்கைகள்அனைத்தையும் நிறைவேற்றி தருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் வாக்குறுதி அளித்தனர். மேலும் பொது மக்களின் நலனுக்காக விழிப்புணர்வு பதாகைகள் வைக்க முடிவு செய்யப்பட்டது. தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 23.10.17