நாகை. ஜன.01., இன்று நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை தொகுதி மக்களும் , அதிகாரிகளும், பிரமுகர்களும் தொடர்ந்து நேரில் சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து , கோரிக்கை மனுக்களையும் கையளித்தனர். தகவல்; #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். 01.01.18
சட்டமன்றம்
நீட் எதிர்ப்பு போராட்ட வழக்கு..! நீதிமன்றத்தில் விசாரனைக்கு ஆஜரான மாணவர் இந்தியா நிர்வாகிகள்..!!
சென்னை.டிச.20., மாணவர் இந்தியா சார்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்தவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாநில நிர்வாகிகள் மீது காவல்துறை நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. வழக்கு விசாரனைக்காக இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன், மாநில பொருளாளர் ஜாவித் ஜாஃபர், மாநில துணைச் செயலாளர் பஷீர் அஹமது, ஊடக பிரிவைச் சேர்ந்த கார்த்திக் ஆகியோர்ஆஜராகினர். விசாரனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்திப்பு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் வழக்கறிஞர்கள் கோபி மற்றும் பிரசாத் உடன் இருந்தனர். செய்தி; #ஊடக_பிரிவு #மாணவர்_இந்தியா
தேங்கிய மழைநீரை அகற்ற துரித நடவடிக்கை! MLA நேரில் ஆய்வு…
கடந்த நான்கு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்த வரும் நிலையில், நாகை நகராட்சிக்கு உட்பட்ட நாகப்பட்டினம் மற்றும் நாகூரில் மழை நீர் தேங்கிய பகுதிகளில் அவற்றை துரிதமாக வெளியேற்ற தமிமுன் அன்சாரி MLA அவர்களின் உத்தரவின் பேரில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 19 வது வார்டில் தேங்கி இருக்கும் மழை நீரை நேரில் வந்து பார்வையிட்ட MLA அவர்கள், அவற்றை துரிதமாக 24 மணி நேரத்திற்குள் வெளியேற்றுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். அருகில் இருந்த கோயிலுக்கும் சென்று மழையால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு அங்கு இருந்த மக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார். தகவல்:- நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 04.12.17
கொட்டும் மழையில்! நாகை தொகுதியில் அமைச்சர் மற்றும் MP ஆகியோருடன் MLA தொடர் சுற்றுப்பயணம்!
நாகை தொகுதியில் இன்றும் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அமைச்சர் O.S.மணியன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கோபால் மற்றும் அதிகாரிகளுடன் மழை வெள்ள நிவாரணப் பணிகளை பார்வையிட சென்றார். நாகை தொகுதிக்குட்பட்ட 174 ஏக்கர் பரப்பளவு கொண்ட பனங்குடி ஏரியை பெரும் நீர் தேக்கமாக மாற்றுவது குறித்து சட்டசபையில் 3 முறை பேசியிருக்கிறார். முதல்வர் எடப்பாடியாரிடமும் இது குறித்து நேரில் வலியுறுத்தி இருக்கிறார். இன்று அமைச்சர், MP மற்றும் மாவட்ட ஆட்சியருடன் அப்பகுதிக்கு M.தமிமுன் அன்சாரி MLA சென்றார். அமைச்சர் O.S.M. அவர்கள், இது குறித்து கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் தூர் வாரி சீரமைக்கும் பணிக்கு திட்ட வரையறை செய்திடுமாறு உத்தரவிட்டார். மேலும், பிராவிடயான் ஆற்றில் குறுக்கே தடுப்பணை கட்டவும், அலோசிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மழை காலத்தில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீர் பனங்குடி ஏரியில் சேமிக்கப்பட்டு, கோடை காலத்தில் நாகை தொகுதி முழுக்கவும், தேவைப்படின் அருகில் உள்ள கீழ்வேளூர் தொகுதிக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு திருப்புமுனை திட்டத்திற்கு இன்று வித்திடப்பட்டிருக்கிறது. தொடர்ந்து சேகல், மருங்கூர், திருச்செங்காட்டங்குடி, திருக்கண்ணபுரம், வடகரை உள்ளிட்ட திருமருகல் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விவசாயிகள்,
பத்திரிக்கையாளர் தோழர்.திரு.மோகன் (MUJ) காலமானார்.(தினகரன் நாளிதழ்) மஜக நிர்வாகிகள் நேரில் அஞ்சலி!
சென்னை.நவ.05., தினகரன் பத்திரிக்கையின் செய்தியாளர் திரு.மோகன் அவர்கள், இன்று மாரடைப்பால் சென்னையில் காலமானார். மனிதநேய ஜனநாயக கட்சியின் மீதும், பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் மீதும் மிகவும் நேசம் பாராட்டியவர். பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சட்டமன்ற உரைகளை உடனுக்குடன் தொகுத்து செய்திகளாக்கிய ஊடகவியலாளர்களில் இவரும் ஒருவர் என்றால் மிகையில்லை. பல இளம் செய்தியாளர்களை ஊக்குவித்து, வழிகாட்டிய பெருமைக்குரியவர். பல சந்தர்ப்பங்களில், சக பத்திரிக்கையாளர்களின் உரிமைகளுக்காக, சமரசம் இன்றி குரல் கொடுத்தவர். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக பத்திரிக்கை நண்பர்களுக்கும், அவர் சார்ந்த பத்திரிக்கை நிறுவனத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இன்று மாலை சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சியி்ல் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில செயலாளர் சாதிக் பாட்சா, மாநில துணைச் செயலாளர் ஷமீம் அகமது, மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை.முபாரக் ஆகியோர் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள். #தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சென்னை