(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன்அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) மியான்மரில் ரோஹிங்ய முஸ்லிம்கள் தொடர்ந்து இன அழிப்புக்கு ஆளாகி வருகின்றனர். ஒரு வாராத்திற்கு மேலாக அங்கு மீண்டும் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிராக மதவெறியர்கள் நடத்தி வரும் கொடூர படுகொலைகள் உலக மக்களை பதற வைக்கின்றன. விடுதலை போராளியாக பார்க்கப்பட்ட மியான்மர் தலைவர் ஆங்சாங் சூகி இவ்விஷயத்தில் ஒரு சுயநலவாதியாகவே நடந்துக் கொள்கிறார். ராணுவ அதிகாரிகளும் ,சில பௌத்த துறவிகளும் முன்னின்று நடத்தும் அட்டூழியங்களை உலகம் இனியும் வேடிக்கைப் பார்க்ககூடாது. பார்க்கவே முடியாத கொடூரமான காட்சிகள் உலக தொலைக்காட்சிகளிலும் , வலை தளங்களிலும் காட்டப்படுகின்றன. இவ்விஷயத்தில் ஐ.நா. கையாலாகாத பொம்மை சபையாகவே இருந்து வருகிறது என்ற குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை . இந்திய அரசு இவ்விஷயத்தில் மியான்மர் தூதரை அழைத்து தனது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். மேலும் உயிருக்கு அஞ்சி இந்தியாவுக்கு ஓடி வரும் ரோஹிங்ய மக்களுக்கு அகதிகள் அந்தஸ்தை வழங்கி அரவணைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம் . மனிதநேய ஜனநாயக கட்சி இக்கோரிக்கைகளை முன்னிறுத்தி , ஆர்ப்பாட்டங்களையும், கருத்தியில் பரப்புரைகளையும் முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவண். M.தமிமுன்அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி
அறிக்கைகள்
பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை மஜக கடும் கண்டனம்…
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் அறிக்கை) கர்நாடகாவில் மனித உரிமைகளுக்காகவும், மனிதநேயத்திற்காகவும் பாடுபட்டு வந்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை தருகிறது கர்நாடகாவில் 2013 முதல் பிரபல படைப்பாளிகள், பத்திரிக்கையாளர்கள் என இதுவரை மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது . மதச்சார்பின்மை , மனித உரிமைகள் ஆகியவற்றுக்காக குரல் கொடுக்கும் பத்திரிகையாளர்கள் குறி வைத்து கொல்லப்படுவதை நாடு உன்னிப்பாக கவனித்து வருகிறது. கருத்து சுதந்திரத்திற்கு எதிரான வகுப்புவாதிகளின் தாக்குதலாகவே இச்சம்பவம் சுட்டிக்காட்டப்படுகிறது. இலக்கியவாதி , பத்திரிக்கையாளர், சமூக செயல்பாட்டாளர் என பன்முகத்தன்மையோடு இயங்கிய போராளி கௌரி லங்கேஷ் மரணம் நாட்டின் சகிப்புத்தன்மைக்கு விடப்பட்ட சவாலாகும். அவரை இழந்துவாடும் அனைவரின் துயரத்திலும் மஜக பங்கேற்கிறது . அவரின் பணிகளை முன்னெடுக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் . இவண் M.தமிமுன் அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 06.09.17
டாக்டர் அ.சேப்பன் மறைவு.! மஜக இரங்கல்..!!
(மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் சமூக வலைதள பதிவு..) இந்திய குடியரசு கட்சியின் (கவாய்) முன்னாள் பொதுச் செயலாளரும், சமூக நீதி போராளியுமான டாகடர்.அ.சேப்பன் அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையை தருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் தலைநிமிர்வுக்காகவும், பிற்படுத்தப்பட்டோர், சிறும்பான்மையினர் உள்ளிட்ட அனைவரின் ஒற்றுமைக்காகவும் பாடுபட்ட போராட்டவாதி அவர். தன்னை தேடி வரும் நோயாளிகளுக்கு 10 ரூபாயில் வைத்தியம் பார்த்த மனிதநேயர். டாக்டர்.ராமதாஸ், ஷஹீத் பழனிபாபா உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து அவர் நடத்திய சமூக நீதிக்கான போராட்டங்கள் மறக்க முடியாதவை.. " புராண விடுதலை பெற இஸ்லாமிய மார்க்கமே தீர்வு " என்ற அவரது நூல் தமிழ் சிந்தனை உலகில் பெரும் வரவேற்பை பெற்றது. வயது முதிர்ச்சியால் காலங்களில் இருந்து ஒதுங்கியிருந்தவர் இன்று நம்மிடம் விடைபெற்றிருக்கிறார். அவரது பணிகளை சமூக நீதி போராளிகள் முன்னெடுப்பார்கள் என்பதில் ஐயமில்லை. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், ஆதரவாளர்களுக்கும் எமது ஆறுதலை தெரிவித்து கொள்கிறோம். இவண். M. தமிமுன் அன்சாரி MLA பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 01.09.17
மாணவி அனிதா தற்கொலை! மஜகவின் இரங்கல் அறிக்கை.!!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) நீட் தேர்வில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், அன்புத் தங்கை அனிதா தற்கொலை செய்துக் கொண்டது பேரதிர்ச்சியை தருகிறது. அனிதா அவர்கள் தன் சக மாணவ, மாணவிகளுடன் சட்டமன்ற விடுதிக்கு வந்து என்னையும், சகோதரர் தனியரசு MLA , கருணாஸ் MLA அவர்களையும் சந்தித்து பேசினார். நாங்கள் இது குறித்து தமிழக முதல்வரிடமும் , சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடமும் வாதிட்டோம். பள்ளிக் கல்விக்கான பொது மேடை அமைப்பின் தலைவர் தோழர் . பிரின்ஸ் கஜேந்திரன் அவர்களுடன் டெல்லி சென்று உச்சநீதிமன்றம் வரை அனிதா போராடினார். சமூக நீதிக்கு எதிராக செயல்படும் மத்திய அரசின் கொள்கைகளின் காரணமாக நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவ சமுதாயம் ஏமாற்றப்பட்டு விட்டது. அந்த விரக்தி காரணமாக இன்று தங்கை அனிதா தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார். அந்த குடிசை வீட்டு தங்கையின் கனவும் பொசுங்கிவிட்டது. அவரது வாழ்வு கடும் துயரில் முடிந்திருக்கிறது. அதிகார திமிரில் இருப்பவர்கள் இந்த அநீதிக்கு பதில் சொல்லியாக வேண்டும். இதற்கு முழுக்க , முழுக்க மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். அதே சமயம் தமிழக
பேரறிவாளனுக்கு பரோல்..! தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..!!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA ஆகியோர் வெளியிடும் கூட்டறிக்கை...) 26 ஆண்டுகாலமாக வெஞ்சிறையில் வாடிய பேரறிவாளனுக்கு இன்று பரோல் கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.பேரறிவாளனின் அன்புத் தாய் அற்புதம்மாளின் கண்ணீருக்கு நீதி கிடைத்திருக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் இதற்காக மனிதநேய ஜனநாயக கட்சி, கொங்கு இளைஞகர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை சார்பில் தொடர்ந்து பேசி வந்தோம். மாண்புமிகு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அம்மா அவர்களிடமும், அதனை தொடர்ந்து இன்றைய மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களிடமும் நாங்கள் வலியுறுத்தினோம். இவ்விசயத்தில் மாண்புமிகு அமைச்சர் திரு.C.V.சண்முகம் அவர்கள் நாங்கள் எடுத்துவைத்த வாதங்களையும், நியாயங்களையும் புரிந்துகொண்டு செயல்பட்டார். இன்று நாங்கள் முன்னெடுத்த முயற்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் C.V.சண்முகம் அவர்களுக்கும் முதல் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். இம்முயற்சிக்கு ஆதரவளித்த மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் சகோதரர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கும், சட்டசபையில் ஒருமித்து ஆதரவளித்த அதிமுக, திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உறுப்பினர்களுக்கும், இதற்காக தொடர்ந்து குரல் கொடுத்த அரசியல் கட்சிகளுக்கும், மனிதஉரிமை ஆர்வலர்களுக்கும்,