(தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA,மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA,முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA ஆகியோர் வெளியிடும் கூட்டு அறிக்கை) கோவையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மரபுகளை மீறி கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்து ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசும்,முதல்வரும் இருக்கும்போது அந்த மாவட்ட அமைச்சர் திரு SP வேலுமணி யைக் கூட அழைக்காமல் கவர்னர் இந்த ஆய்வுக் கூட்டத்தை நடத்திருக்கிறார். கவர்னர் என்பவர் மாநில ஆட்சி நிர்வாகத்தின் கண்காணிப்பாளர் என்ற எல்லையை தாண்டி செயல்படுவதை ஏற்க முடியாது. புதுச்சேரியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வருக்கு போட்டியாக அங்கு கவர்னர் கிரேண்பேடி நீயா ? நானா ? என செயல்படுவதால் அங்கு இரட்டை தலைமைத்துவம் உருவெடுத்து நிர்வாகம் குழப்பத்திற்குள்ளாகிருக்கிறது. இரட்டை தலைமைத்துவம் என்பது நிர்வாக சீர்கேட்டிற்கே வழிவகுக்கும். மத்திய அரசு யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் கையாண்ட யுக்தியை,தமிழ்நாட்டிற்குள்ளும் விரிவுப்படுத்தி,மாநிலங்களின் எஞ்சி நிற்கும் உரிமைகளையும் கபளிகரம் செய்யும் திட்டமாக இதனை பார்க்க வேண்டியிருக்கிறது. மாநில சுயாட்சிக்கான முழக்கங்கள் வலுப்பெற்று வரும் நிலையில்,தமிழக கவர்னரின் சர்வாதிகார போக்கை தமிழக அரசும்,முதல்வரும் மெளனமாக வேடிக்கைப் பார்ப்பது
அறிக்கைகள்
பைந்தமிழன் சிறப்புகளை வகுப்பெடுத்தவர்..! ஐயா.நன்னன் மறைவுக்கு மஜக இரங்கல்..!!
(#மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..) தனித்தமிழன் இயக்கத்தின் ஒப்பற்ற பரப்புரையாளராகவும், தமிழ் மொழி வல்லுநரகவும் வாழ்நாள் முழுக்க உழைத்த தமிழ் பேரரிஞர் ஐயா. நன்னன் அவர்களின் மறைவு தமிழ் கூறும் நல்லுள்ளகிற்கு ஒரு பேரிழப்பு என்பதில் ஐயமில்லை. இதழ்கள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் பைந்தமிழன் சிறப்புகளை வகுப்பெடுத்த திராவிட இயக்க புதல்வரை இழந்திருக்கிறோம். தனது பணிகள் மூலம் நிகழ்கால தமிழாசிரியர்களுக்கு இவரே முன்னோடியாக திகழ்ந்தார். அவர் நவீன தமிழ் இலக்கணத்தின் தந்தையாகவும் திகழ்ந்தார். சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்ததுடன் 60க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி அடுத்த தலைமுறைக்கும் தனது பணிகளை விரிவுபடுத்தி சென்றிருக்கிறார். தவறின்றி தமிழ் எழுதுவோம், திருக்குறள் மற்றும் தொல்காப்பியம் நூல்களின் உரை விளக்கங்கள், பெரியார் கணினி ஆகிய படைப்புகள் அவரது பெருமையை பேசும். அவரது செம்மொழி தமிழ் வளர்த்த பணியை நிகழ்கால தமிழ் உணர்வாளர்கள் முன்னெடுக்க வேண்டும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினற்கும், திராவிட இயக்க மற்றும் தமிழ் உணர்வாளர்கள் உள்ளிட்டோரின் துயரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியும் உளப்பூர்வமாக பங்கேற்கிறது... இவண்; #M_தமிமுன்_அன்சாரி_MLA, பொதுச் செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 09.11.17
நவம்பர் 8 கருப்பு நாள்..! எதிர்கட்சிகள் போராட்டத்திற்கு மஜக ஆதரவு…!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, வெளியிடும் அறிக்கை) கடந்த ஆண்டு நவம்பர் 8 அன்று மத்திய பாஜக அரசு 500, 1000, ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்க செய்தது. இதன் மூலம் பொருளாதாரப்புரட்சி ஏற்படும் என்றும், கருப்பு பணம் ஒழியும் என்றும் ,புதிய இந்தியா பிறக்கிறது என்றும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு விளக்கமளித்தார். ஆனால், கடந்த ஓராண்டில் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டு , நாட்டின் பொருளாதாரம் சீரழிந்திருக்கிறது.நாடெங்கும் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார அனுகுமுறைகளை தோலுரிக்கும் வகையில் நாடுதழுவிய அளவில் எதிர்கட்சிகள் நவம்பர் 8 அன்று கருப்பு தினம் கடைபிடிக்க இருப்பது வரவேற்க்கதக்கது. எதிர் கட்சிகளின் இப்போராட்டத்திற்கு மஜக வின் சார்பில் எமது தார்மீக ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம். இவன்; #M_தமிமுன்_அன்சாரி_MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி.
சீனி விலை உயர்வுக்கு மஜக கடும் கண்டனம்!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை...) ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சீனியின் விலையை ரூ.13.50 யிலிருந்து ரூ.25 ருபாயாக விலை உயர்த்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஏழை,எளிய மக்களும் சாமானிய மக்களும் மிகவும் நம்பி இருக்கும் ரேஷன் கடையில் இப்படி இரண்டு மடங்காக விலையை உயர்த்திருப்பது இதற்கு முன்பு நடைபெறாத ஒர் நிகழ்வாகும். 1ரூபாய் அல்லது 2ரூபாய் உயர்த்தினால் மக்கள் சகித்து கொள்வார்கள். இப்படி இரண்டு மடங்கு ஏற்றினால் எப்படி பொறுத்துக்கொள்வார்கள்? சாமானிய மக்களின் அன்றாட உணவு தேவைகளின் ஒன்றுதான் சீனி. இதில் ஏழைகளுக்கு ஒரு விலை,மற்றவர்களுக்கு ஒரு விலை என மாண்புமிகு அமைச்சர் திரு.காமாராஜ் அவர்கள் விளக்கம் அளித்திருப்பது ஏற்க கூடியதாக இல்லை. எனவே ரேஷன் கடைகளில் சீனியின் மீதான விலை உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவண், #M_தமிமுன் _அன்சாரி_MLA, #பொதுச்_செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி. 28.10.2017
திருமாவளவன் மீது வரம்பு மீறிய விமர்சனத்திற்கு மஜக கண்டனம்!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பாஜகவுக்கு எதிராக அரசியல் ரீதியான விமர்சனங்களை முன் வைத்ததற்கு உரிய வகையில் பதில் அளிக்காமல், அவரை கட்டப்பஞ்சாயத்துக்கார் என பாஜக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் கூறியிருப்பதும், பாஜகவின் தேசிய செயலாளர் H.ராஜா அவர்கள், விடுதலை சிறுத்தைகளை அரசியல் களத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று கூறியிருப்பதும் வண்மையாக கண்டிக்கத்தக்கது. அரசியல் விமர்சனங்களுக்கு, அரசியல் ரீதியாக பதில் அளிப்பதுதான் நாகரீகமாகும். அதுவே விவேகமான அரசியலும் கூட, தமிழிசை அவர்கள் மீது சிலர் தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து விமர்சனங்களை முன் வைப்பதை நாங்கள் ஏற்பதில்லை. அதுபோலதான், தொல்.திருமாவளவன் அவர்களை தரம் தாழ்ந்து அவர்கள் விமர்சிருத்திருப்பதையும் ஏற்க முடியாது. அயோத்தி தாசர் பண்டிதர், தாத்தா ரெட்டைமலை சீனிவாசனார் ஆகியோரின் வழியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் பணியாற்றி வருகிறார். தலித் வட்டத்தை தாண்டி தமிழர் தேசியம், தமிழ் மொழி பண்பாடு, திராவிட இயக்க நலன், சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு ஆகிய களங்களில் அவர் ஆற்றி வரும் பணிகள் அனைவராலும் வரவேற்கப்படுகிறது. அவர் ஃபாஸிஸத்தை வழிநடத்தவில்லை, இன அழிப்பை அங்கீகரிப்பதில்லை, ஒற்றைக் கலாச்சார திணிப்பை ஏற்பதில்லை,