(மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு) கர்நாடகாவில் குறுக்குவழியில் ஆட்சியை கைப்பற்றலாம் என்று முயற்சித்த பாஜகவின் கனவில் மண் விழுந்திருக்கிறது . காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்திலிருந்து 8 MLA களை உருவி , குதிரைப்பேரம் மூலம் கவர்னர் உதவியோடு அவர்கள் போட்ட சதித்திட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் வைத்த 'செக்' காரணமாக நினைத்தது நடைபெறாமல் போய்விட்டது . முதலமைச்சராக பதவியேற்ற 56 மணிநேரத்தில் எடியூரப்பா ராஜினாமா செய்யும் பரிதாபநிலைக்கு தள்ளப்பட்டு விட்டார் . இப்போது நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது . பா.ஜ.க ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் கட்சி மஜதவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்திருப்பது வரவேற்கதக்கது . பொதுவில் குமாரசாமி ஒரு அதிர்ஷ்டக்காரர் . அவர் அப்பா தேவகௌடாவை போலவே! முன்பு ஐக்கிய முன்னணி ஆட்சியில் ஒன்றுபட்ட பழைய ஜனதாதளத்தின் சார்பில் யாரும் எதிர்பாராத வகையில் அவர் பிரதமர் ஆனார் . அதே அதிர்ஷ்ட காற்று குமாரசாமியின் பக்கமும் திரும்பியுள்ளது . இவர்களின் கூட்டணி ஆட்சியில் கர்நாடகா வளம் பெற வேண்டும் . நல்லாட்சி கொடுத்த சித்தராமையாவுக்கே முழுமையான வெற்றியை மக்கள் கொடுக்கவில்லை என்பதை இவர்கள் உணர வேண்டும். அதுபோல் காவிரி ஆற்று உரிமையில்
அறிக்கைகள்
இனியாவது காவிரியில் தண்ணீர் கிடைக்குமா?
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..) தேர்தலுக்கு முந்தைய எதிர்பார்ப்பின் படியே கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு வெளிவந்திருக்கிறது. பாஜக அதிக இடங்களைப் பெற்ற போதிலும் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு அருதிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. மதச்சார்பற்ற ஜனதா தளத்தோடு கூட்டணி வைக்க வேண்டும் என்று கர்நாடக விசன் போன்ற அமைப்புகள் வலியுறுத்தியபோது, காங்கிரஸ் கட்சியின் தலைமை அதை நிராகரித்தது. தங்களின் சாதனைகள் போதும் என்ற கற்பனையில் காங்கிரஸ் கட்சி மிதந்தது. தேவகவுடா அவர்கள், மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் உவைசியின் M.I.M கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி வைத்தார். மேலும் மலையாளிகள் மற்றும் தெலுங்கர்களின் கணிசமான ஆதரவையும் பெற்றார். அது காங்கிரஸ் கட்சியின் வெற்றியை பெருமளவு பாதித்துள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்தித்து இருந்தால் பாஜக 30 இடங்களில் கூட வென்றிருக்க வாய்ப்பு இருந்திருக்காது. இருப்பினும் பாஜகவின் மதவெறி- ஊழல் ஆட்சி கர்நாடகாவில் அமையவிடாமல் தடுக்கும் முயற்சியாக மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் இறங்கி வந்தது பாராட்டத்தக்கது. எது எப்படி இருந்தாலும், கர்நாடகாவில் அமையவிருக்கும் ஆட்சி,காவிரி ஆற்று
தமிழக முதல்வருடன் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA சந்திப்பு.!
மே-15 தேதிக்குள் நோன்பு கஞ்சிக்கான அரிசியை வழங்க வேண்டும்..! ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை சுமுகமாக தீர்க்க வேண்டும்..! நாகூர் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும்..! (தமிழக முதல்வரிடம் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA நேரில் கோரிக்கை..) இன்று (09-04-18) தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவரது கிரீன்வேஸ் இல்ல வீட்டில் சந்தித்துப் பேசினார். நாகூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில், காரைக்காலில் அமைந்துள்ள 'மார்க்' தனியார் துறைமுகத்தால், சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதனால், அங்கு நிலக்கரியை நிரந்தரமாக இறக்குமதி செய்ய தடை விதிக்க புதுவை அரசுக்கு, தமிழக அரசு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றும், கடந்த மே 4 அன்று நாகூரில் சமூக ஆர்வலர்கள் நடத்திய போராட்டத்தின் போது, 64 பேர் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ரமலான் நோன்பு கஞ்சிக்கு, தமிழக அரசு சார்பில் வினியோகிக்கப்படும் இலவச அரிசியை மே 15 தேதிக்குள் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் கிடைக்க செய்யும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்
ஜாக்டோ – ஜியோ போராட்டகாரர்கள் கோரிக்கைகளின் மீது தமிழக அரசு கவனம் எடுக்க வேண்டும்..! மஜக கோரிக்கை…!!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..) ஓய்வு ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி #ஜாக்டோ_ஜியோ அமைப்பை சேர்ந்த #அரசு_ஊழியர்கள் போராட்டங்களை நடத்தி வருவது தமிழக மக்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. அவர்களது நியாயமான கோரிக்கைகளை பேசி தீர்க்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஜாக்டோ - ஜியோ அமைப்பினரும் சுமுகமான முறையில் இப்பிரச்சனையை எதிர்க்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். அரசு ஊழியர்களின் முற்றுகை போராட்டத்தை ஒடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில், கைது செய்யப்பட்ட ஆண்கள், பெண்கள் என அனைத்து அரசு ஊழியர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவண்; #மு_தமிமுன்_அன்சாரி_MLA, பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி, 08/05/2018.
தமிழகத்தில் சாகர் மாலா திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்..! மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA பேட்டி..!!
அறந்தாங்கி.மே.02., மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் கோட்டைப்பட்டிணம் பகுதியில் பல்வேறு இயக்கங்கள் மற்றும் கட்சியில் இருந்து விலகி மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு பதிலளித்த மஜக பொதுச்செயலாளர் தமிழகத்தில் மீனவர்கள் மற்றும் கடலோர பகுதிகளில் வாழும் மக்களை முழுதுமாக அழித்துவிட்டு அதன் மூலம் கொண்டுவரப்படும் #சாகர்_மாலா திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும், காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒத்த கருத்துடன் செயல்பட வேண்டும் என்றும், #காவிரி_மேலாண்மை_வாரியம் தொடர்பான தீர்ப்பில் உள்ள #ஸ்கீம் என்ற வார்த்தைக்கு இன்னும் அர்த்தங்கள் கண்டுபிடிக்கபடவில்லை என்றும் பதிலளித்தார்கள். இதில் மாநில துணைபொதுச்செயலாளர் மண்டலம் ஜெய்னுலாப்தீன், மாவட்ட செயலாளர் இ.முபாரக் அலி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், மாவட்ட துணைச்செயலாளர் செய்யது அபுதாகிர் மற்றும் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி. #MJK_IT_WING #மஜக_புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம். 02.05.2018