(மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் வெளியிடும் பத்திரிக்கை செய்தி..) திருவாரூர் மாவட்டம் #முத்துப்பேட்டையில் ஆஸாத் நகர் பகுதியில் அமைந்துள்ள #மீன்_மார்க்கெட்டை அகற்ற கோரி பாஜகவினர் H.ராஜா தலைமையில் கால வரையற்ற உண்ணாவிரதத்தை நாளை (20-06-2018) முதல் அறிவித்துள்ளனர். இது குறித்து பரபரப்புகளை உருவாக்கி, பதட்டத்தை பரப்புவது புத்திசாலித்தனமல்ல. அங்கு தமிழக காவல்துறை அமைதியை சட்ட ரீதியாக நிலை நாட்டும் என நம்புகிறோம். அவர்கள் பாராபட்சமின்றி உரிய நடவடிக்கைகளை எடுக்க அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. முத்துப்பேட்டையில் எல்லா சமூக மக்களும் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழவே விரும்புகின்றனர். அதற்கு இடையூறு செய்ய வேண்டாம் என அனைத்து தரப்பையும் கேட்டுக்கொள்கிறோம். இவண்:- #நாச்சிகுளம்_தாஜுதீன் மாநில செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 19/6/2018
அறிக்கைகள்
“நீட்” தோல்வியால் தற்கொலையான பிரதீபாவுக்கு நிவாரணம் வழங்குக..! தமிமுன் அன்சாரி MLA, தனியரசு MLA முதல்வரிடம் நேரில் வலியுறுத்தல்..!!
"நீட்" தேர்வெழுதி அதில் தோல்வியடைந்ததால் விரக்தியடைந்து மரணமடைந்த #பிரதீபா-வின் குடும்பத்திற்கு உரிய தேவையான நிவாரண உதவியும், அவரது குடும்பத்திற்கு ஒரு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், அதுபோல் தற்கொலைக்கு முயன்று தற்போது சிகிச்சை பெற்றுவரும் #கீர்த்தனா-வுக்கு உரிய நிவாரண உதவியும், உரிய மருத்துவ சிகிச்சையும் வழங்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA அவர்களும் தமிழக முதல்வரிடம் கோரிக்கையை நேரில் கொடுத்தனர். அவை உறுப்பினர்கள் முன்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் எடப்படியார் அவர்கள் இது குறித்து பரிசீலிப்பதாக கூறினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம் 05.06.2018
வேல்முருகன் கைதில் உள்நோக்கம்! மஜக கடும் கண்டனம்…
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் அறிக்கை..) தூத்துக்குடியில் கலவரத்தாலும், துப்பாக்கிசூட்டாலும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற #தமிழக_வாழ்வுரிமை_கட்சி தலைவர் #வேல்முருகன் அவர்களை காவல்துறை விமான நிலையத்தில் கைது செய்துள்ளது. சமீபத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வசூலிக்கும் சுங்க கட்டண எதிர்ப்பு தெரிவித்து அவர் நடத்திய போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குக்காக, இப்போது அவரை கைது செய்திருப்பதாக காவல்துறை கூறுவதை ஏற்க முடியவில்லை. அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இத்தனை நாள் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது தூத்துக்குடி சம்பவத்தை முன்னிட்டு கைது செய்திருப்பது உள்நோக்கம் கொண்டதாகும், அதை கண்டிகிறோம். பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களை யாரும் சென்று சந்தித்து விடக்கூடாது என்ற குறுகிய நோக்கில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுபோன்ற போக்குகள் தமிழக காவல்துறைக்கு மேலும் களங்கங்களையே உருவாக்கும் என்பதை சுட்டிக் காட்டுகின்றோம். இவண்; #மு_தமிமுன்_அன்சாரி_MLA, #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி, 26/05/2018.
திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி..! மஜக மாநில பொருளாளர் பங்கேற்பு..!!
திருவண்ணாமலை.மே.23., திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (22/05/2018) #மனிதநேய_ஜனநாயக_கட்சி திருவண்ணாமலை நகர செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி T.S பாலு திருமண மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. நகர செயல்வீரர்கள் கூட்டத்திற்கும் , இப்தார் நிகழ்ச்சிக்கும் சிறப்பு அழைப்பளாராக மஜக மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது M.com, அவர்கள் கலந்து கொண்டார். மாநில பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்களுக்கு வழி நெடுங்கிலும் இளைஞர்கள் வாகண பேரணியுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பில் #ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அறவழியில் 100-வது நாளாக அமைதியாக போராடிய மக்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக தாக்குதல் , துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 12க்கும் மேற்பட்டோர் பலியானதை வருத்ததுடன் கண்டனம் தெரிவித்தார். பின்னர் T. S பாலு திருமண மண்டபத்தில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இப்தார் நிகழ்ச்சிக்கு பிறகு நகர செயல்வீரர்கள் கூட்டம் நகர செயலாளர் அக்பர் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலாளர் K.காஜா ஷரிப், மாவட்ட பொருளாளர் S.L.செய்யது முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில துணைச் செயலாளர் பல்லாவரம் ஷஃபி, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு மஜக கடும் கண்டனம்..!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை..) ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, தொடர் போராட்டத்தின் நூறாவது நாளாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதிப் பேரணி சென்ற தூத்துக்குடியிலுள்ள 18 கிராம மக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடி நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உரிமைக்காக போராடிய பொதுமக்கள் மீது , துப்பாக்கி சூடு நடத்தியது நம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமோ என்கிற அச்சத்தை எழுப்புகின்றது. இக்கொடுஞ் செயலை மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். சுற்றுச்சூழலுக்காகவும், மண்ணுரிமைக்காகவும் உணர்வுப்பூர்வமாக போராடிய அம்மக்களின் நியாயத்தை உணரத்தவறியது அரசு இயந்திரங்களின் குற்றமாகும். நம்பிக்கை இழந்த மக்கள் வீதிகளில் அணிதிரள்வது என்பது ஜனநாயத்தின் ஒரு அம்சமாகும் . அதில் சிலர் வரம்புமீறல்களில் ஈடுபடும்போது, அதை இலகுவாக கையாண்டிருந்திருக்க வேண்டும் . அதற்கான வழிமுறைகளும் இருக்கின்றன. ஆனால் காக்கை, குருவிகளை சுடுவதுபோல ஈவு இரக்கமற்ற முறையில் போராட்டகாரர்களை சுட்டுக்கொன்றிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இதுபோன்ற சம்பவங்கள் இனி அங்கு நிகழாமல் இருக்க , தமிழக அரசு உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக