சென்னை.செப்.04., தமிழகத்தில் பல்வேறு சேவைகளை வழங்கி வரும் அலெகிரிய ஹாலிடேஸ் நிறுவனம் புதிதாக போக்குவரத்து சேவையை தொடங்கியது, புதிய ஆம்னி பேருந்து சேவையின் தொடக்க விழா சென்னை கோடம்பாக்கத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது. சென்னை - இளையான்குடி - கீழக்கரை வழித்தடத்தில் இயங்கும் புதிய பேருந்து சேவையை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தொடங்கி வைத்தார். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் வசீகரன் திரைப்பட நட்சத்திரங்கள் கானா உலகநாதன், வையாபுரி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #சென்னை 04.09.2021
மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத்
மஜக கடலூர் வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்! மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு.!
செப்.03,மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் 02.09.2021 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, அவர்கள் கலந்து கொண்டு மாவட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ததுடன் எதிர்கால வளர்ச்சிக்கான ஆலோசனைகளையும் வழங்கி பேசினார். அவருடன் அவைத் தலைவர் சம்சுதீன் நாசர் உமரி, மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் பி அஜ்மீர் கான் தலைமையில் வகிக்க நெய்வேலி நகர பொருளாளர் ஜாகிர் உசேன் வரவேற்புரையாற்றிட மாவட்ட துணைச் செயலாளர்கள் ஏ பி எம் சலீம், ரியாஸ் ரகுமான், தலைமை கழக பேச்சாளர் கடலூர் மன்சூர் ஆகியோர் முன்னிலை வகிக்க மாவட்டத்தின் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகளும், செயல்வீரர்களும் திரளாக பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #கடலூர்_வடக்கு_மாவட்டம். 02.09.2021
மஜக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆய்வுக்குழு கூட்டம்! மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு.!
செப்:02., மனிதநேய ஜனநாயக கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆய்வுக்குழு கூட்டம் 01.09.2021 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, அவர்கள் கலந்துகொண்டு மாவட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார். அவருடன் அவைத் தலைவர் சம்சுதீன் நாசர் உமரி, மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கள்ளக்குறிச்சி_மாவட்டம் 01.09.2021
மஜக விழுப்புரம் மாவட்ட ஆலோசனை கூட்டம்! மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது பங்கேற்பு!
செப்:02., மனிதநேய ஜனநாயக கட்சியின் விழுப்புரம் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் முஹம்மது ரிஸ்வான், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, Mcom. அவர்கள் கலந்துகொண்டு மாவட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார். அவருடன் அவைத் தலைவர் சம்சுதீன் நாசர் உமரி, மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், ஆகியோர் உடனிருந்தனர். சமீபத்தில் நடைபெற்ற நிர்வாகக் குழுவில் எடுத்த முடிவின் அடிப்படையில் நிர்வாக வசதிக்காக விழுப்புரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டது. விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டம் விழுப்புரம் தெற்கு மாவட்டம் என்றும், திண்டிவனம், மயிலம், வானூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டம் விழுப்புரம் வடக்கு மாவட்டம் என்றும் பிரிக்கப்பட்டது. நிறைவாக மாவட்ட பொருளாளர் சவுக்கத் அலி, நன்றியுரை யாற்றினார். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #விழுப்புரம்_மாவட்டம் 01.09.2021
ஈரோட்டில் மறைந்த மஜக நிர்வாகி இல்லத்திற்கு மாநில பொருளாளா் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வருகை!
செப்:01., மனிதநேய ஜனநாயக கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட பொருளாளராக பணியாற்றிய சகோ. முகமது அலி, அவர்கள் சில நாட்களுக்கு முன்பு உடல் நலக் குறைவால் மரணமடைந்தார். இன்று அவரது இல்லத்திற்கு மாநில பொருளாளா் எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது, Mcom. அவர்கள் வருகை தந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் துணை பொதுச் செயலாளர் சையது அகமது பாருக், மாநில துணை செயலாளா் பாபு சாகின்ஷா, ஆகியோர் உடனிருந்தனர். இந்நிகழ்வில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஷஃபீக் அலி, மேற்கு மாவட்ட செயலாளா் அந்தியூா் ஷானவாஸ், கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் பக்கீர் முகமது, பாபு, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளா் பயாஸ், IKP மாவட்ட செயலாளா் ஷேக், பகுதி செயலாளா் ஹாரீஸ், மேற்கு மாவட்ட IT Wing மாவட்டச்செயலாளா் சபி , ஆகியோர் உடன் இருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #ஈரோடு_கிழக்கு_மாவட்டம் 31.08.2021