அலெகிரியா ஹாலிடேஸ் நிறுவனத்தின் புதிய ஆம்னி பேருந்து சேவை தொடக்க விழா.! மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது பங்கேற்பு.!!

சென்னை.செப்.04., தமிழகத்தில் பல்வேறு சேவைகளை வழங்கி வரும் அலெகிரிய ஹாலிடேஸ் நிறுவனம் புதிதாக போக்குவரத்து சேவையை தொடங்கியது, புதிய ஆம்னி பேருந்து சேவையின் தொடக்க விழா சென்னை கோடம்பாக்கத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது.

சென்னை – இளையான்குடி – கீழக்கரை வழித்தடத்தில் இயங்கும் புதிய பேருந்து சேவையை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தொடங்கி வைத்தார். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்வில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் வசீகரன் திரைப்பட நட்சத்திரங்கள் கானா உலகநாதன், வையாபுரி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#சென்னை
04.09.2021