You are here

மஜக மயிலாடுதுறை மாவட்ட ஆலோசனைக்கூட்டம்! மாநில துணைச்செயலாளர் நாகை முபாரக் பங்கேற்பு!!

செப்.04,. மனிதநேய ஜனநாயக கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட ஆலோசனை கூட்டம் (MJVS) மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க மாநில துணை செயலாளர் N.M.மாலிக் தலைமையில் நீடூரில் நடைப்பெற்றது.

மஜக மாநில துணை செயலாளரும், மாவட்ட பொறுப்பாளருமான நாகை முபாரக் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கட்சி வளர்ச்சி பணிகள், கிளை கட்டமைப்பு மற்றும் தீவிர உறுப்பினர் சேர்க்கை குறித்து பேசினார்.

கூட்டத்தின் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன…

1. சபியாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்.

தலைநகர் டெல்லியில் கடந்த வாரம் சபியா சைஃபி என்ற பெண் காவல் அதிகாரி நான்கு நபர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதுடன் 50 இடங்களில் வெட்டப்பட்டும் மார்பகங்களை அறுத்தும் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இந்தக் கொடூரச் சம்பவம் நடைபெற்று ஒரு வாரகாலமாகியும் இதுவரை யாரும் கைது செய்யப்படாதது கண்டனத்திற்குரியது. டெல்லியின் காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒன்றிய அரசு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

2. அண்ணா பிறந்த நாளான செப்-15 முன்னிட்டு 10 ஆண்டுக்கு மேல் உள்ள ஆயுள் சிறைவாசிகளை ஜாதி, மத, வழக்கு பேதமின்றி முன்விடுதலை செய்ய வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை மஜக கடுமையாக கண்டிக்கின்றது. ஏழை எளிய மக்களை பாதிக்ககூடிய சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என ஒன்றிய் அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

4.மயிலாடுதுறையிலிருந்து-தரங்கம்பாடி வரை 1926 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை ரயில் இயங்கியது. அதன்பின்பு ரயில் வசதி நிறுத்தப்பட்டதால் பல சிரமங்களை கடந்து மக்கள் வந்து செல்கிறார்கள். ஆகையால் ஒன்றிய அரசு தனி கவனம் செலுத்தி மயிலாடுதுறை-தரங்கம்பாடி ரயிலை விரைந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில், குவைத் மண்டல துணை செயலாளர் மாயவரம் சபீர் அஹமது, மாவட்ட துணை செயலாளர்கள் ஆக்கூர் ஷாஜகான், நீடூர் M.S.மிஸ்பா, M.S.அஜ்மல் உசேன், தைக்கால் அசேன் அலி, மாவட்ட அணி நிர்வாகிகள் ஹாஜா சலிம், லியாகத் அலி, ஜெப்ருதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#மயிலாடுதுறை_மாவட்டம்.

Top