விருதுநகர்.ஜன.18., மனிதநேய ஜனநாயகக் கட்சியின் விருதுநகர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று விருதுநகரில் நடைபெற்றது. இக்கூட்டம் மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத், மாநில ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர் , இணைப் பொதுச்செயலாளர் மைதீன் உலவி, மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் J.S.ரிஃபாய், மாநில துணைச் செயலாளர் புளியங்குடி S.செய்யது அலி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் விருதுநகர் மாவட்டச் செயலாளர் கன்மணி காதர், மாவட்டப் பொருளாளர் S.பாதுஷா மற்றும் விருதுநகர் மாவட்டத் துணைச் செயலாளர் A. அகமது ராஜா மற்றும் இராஜை கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், மாவட்த்தின் அனைத்து பகுதிகளிலும் கிளைகளை உருவாக்குவது, பிப்ரவரி 18 அன்று பொதுக்குழு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_விருதுநகர்_மாவட்டம்
மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத்
மஜக திருப்புவனம் நகர ஆலோசனை கூட்டம்..! மஜக பொருளாளர் பங்கேற்பு..!!
சிவகங்கை.ஜன.14., மனிதநேய ஜனநாயக கட்சியின் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நகர ஆலோசனை கூட்டமும், ஜமாத்தார்கள் சந்திப்பும் நேற்று (14/01/2018) திருப்புவனத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட செயலாளர் காஜா மைதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ஜமாத்தார்களின் சந்திப்பில் முத்தலாக் சட்டம் சம்மந்தமாகவும், திருப்புவனத்தில் பள்ளிவாசல் இடிப்புக்கு பிறகு அரசு கொடுத்த வேறு ஒரு இடத்தில் பள்ளிவாசல் கட்டுவது என்றும், அதற்கு அரசு கொடுக்கும் பணம் போதாது அதை அதிகப்படுத்த வேண்டும் என்றும், அரசுக்கு கோரிக்கை வைத்தார் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது. மேலும் அவர் பேசுகையில் கட்சி கடந்து வந்த பாதையும் பொருளாளர் தனது சிறப்பான பேச்சின் மூலம் வெளிப்படுத்தினார்.. இக்கூட்டத்தில் மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர் , வர்த்தக அணி மாநில துணைச் செயலாளர் ஷாகுல் ஹமீது, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா, தலைமை செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், சிவகங்கை மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான், இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் இலியாஸ், மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் ஒத்தக்கடை பாரூக், சிவகங்கை மாவட்ட துணைச் செயலாளர் அல்லாபிச்சை மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். இக்கூட்டத்தை மலேசியா
மஜக பொருளாளருடன் SDPI வழக்கறிஞர்கள் சந்திப்பு..!
சென்னை.ஜன.14., மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையகத்திற்கு SDPI கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி தலைவர் M.M.அப்பாஸ் அவர்கள் வருகை தந்தார். மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களை அப்பாஸ் உள்ளிட்ட பல்வேறு வழக்கறிஞர்கள் சந்தித்து தமிழ்நாடு பார் கவுன்சிலிங் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு SDPI கட்சியின் சார்பில் போட்டியிட ஆதரவு திரட்டினர். இச்சந்திப்பின் போது மஜகவின் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனிஸ், முஹம்மது சைபுல்லாஹ் , SDPI கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், அக்கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில செயலாளருமான ராஜா முகம்மது , உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நஃவில், தமிம் மற்றும் ஷேக் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல் #தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_மத்திய_சென்னை 12.01.18
முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக ஓசூரில் கண்டன ஆர்ப்பாட்டம்..! மஜக மாநில பொருளாளர் பங்கேற்பு…!!
கிருஷ்ணகிரி. ஜன.11., மத்திய மதவாத அரசை கண்டித்து ஓசூரில் ஜமாத்துல் உலாமா சபை சார்பாக அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களை கூட்டி முத்தலாக் தடை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மஜக பொருளாளர் அவர்களின் கண்டன உரையில் குறிப்பாக பாசிசத்திற்கு எதிராக பிற்படுத்தபட்டோரும், ஒடுக்கபட்டோரும், நாத்திகர்களும், சேர்ந்து வேரறுப்போம் என்றும், முத்தலாக் தடை சட்டம் இந்திய இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்றார். இஸ்லாம் வழங்ககூடிய ஷரியத் சட்டம் அழகிய வாழ்வியல் நெறிமுறையை சூட்டிக்காட்டியிக்கிறது. இது போன்ற அழகிய சட்டங்கள் எந்தவொரு மார்க்கத்திலும் கிடையாது என்றும் இந்த சட்டத்தை உணர்ந்த பிற சமூக மக்களும் ஷரியத் சட்டத்திற்காக குரல் கொடுத்து வருகிறார்கள் என்பதை தெளிவாக பேச்சில் சுட்டிக்காட்டினார். இதில் மஜகவின் அவைத் தலைவர் சம்சுதீன் நாசர் உமரி, மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் அமீன், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் முஹம்மது ஆரிப், மாவட்ட பொருளாளர் சையத் நாவஸ், தலைமை
நீட் போராட்ட வழக்கு..! மஜக பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் விடுதலை..!!
சென்னை.ஜன.09., அரியலூர் மாணவி அனிதா கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலும் மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் மனம் உடைந்த சகோதரி அனிதா (தற்) கொலை செய்து கொண்டார். சகோதரி அனிதாவின் படுகொலையை கண்டித்து கடந்த ( 03.09.2017 ) அன்று சென்னையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் போராட்டம் நடத்த மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது தலைமையில் மெரினாவை நோக்கி பேரணியாக சென்றபோது காவல் துறையினர் தடுத்து மஜகவினரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா , மத்திய சென்னை மாவட்ட துணைச் செயலாளர் ரவுஃ ரஹிம் , திருவல்லிக்கேணி பகுதி முன்னாள் செயலாளர் பஷீர் அஹமது, ஜாவித் ஜாபர் மற்றும் லத்திப் ஆகியோர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இன்று (09.01.2018) எழும்பூர் நீதிமன்றத்தில் இவ்வழக்கின் மீதான விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் சிறப்பாக வாதாடிய வழக்கறிஞர் சதாத் அவர்கள் போராட்டத்தின் நோக்கத்தையும், சமுதாய அக்கறையுடன் நடைபெற்றதாகவும்