சிவகங்கை.ஜன.14., மனிதநேய ஜனநாயக கட்சியின் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நகர ஆலோசனை கூட்டமும், ஜமாத்தார்கள் சந்திப்பும் நேற்று (14/01/2018) திருப்புவனத்தில் நடைபெற்றது.
இக்கூட்டம் மாவட்ட செயலாளர் காஜா மைதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
ஜமாத்தார்களின் சந்திப்பில் முத்தலாக் சட்டம் சம்மந்தமாகவும், திருப்புவனத்தில் பள்ளிவாசல் இடிப்புக்கு பிறகு அரசு கொடுத்த வேறு ஒரு இடத்தில் பள்ளிவாசல் கட்டுவது என்றும், அதற்கு அரசு கொடுக்கும் பணம் போதாது அதை அதிகப்படுத்த வேண்டும் என்றும், அரசுக்கு கோரிக்கை வைத்தார் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது.
மேலும் அவர் பேசுகையில் கட்சி கடந்து வந்த பாதையும் பொருளாளர் தனது சிறப்பான பேச்சின் மூலம் வெளிப்படுத்தினார்..
இக்கூட்டத்தில் மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர் , வர்த்தக அணி மாநில துணைச் செயலாளர் ஷாகுல் ஹமீது, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா, தலைமை செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், சிவகங்கை மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான், இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் இலியாஸ், மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் ஒத்தக்கடை பாரூக், சிவகங்கை மாவட்ட துணைச் செயலாளர் அல்லாபிச்சை மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இக்கூட்டத்தை மலேசியா ஒருங்கிணைந்த மண்டல செயலாளர் முஹம்மது சுபேர் அவர்கள்
மிக சிறப்பாக ஒருங்கிணைத்தார்.
இறுதியான நிகழ்வாக தன்னெழுச்சியாக 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சிவகங்கை_மாவட்டம்