முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக ஓசூரில் கண்டன ஆர்ப்பாட்டம்..! மஜக மாநில பொருளாளர் பங்கேற்பு…!!

image

image

image

கிருஷ்ணகிரி. ஜன.11., மத்திய மதவாத அரசை கண்டித்து ஓசூரில் ஜமாத்துல் உலாமா சபை சார்பாக அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களை கூட்டி முத்தலாக் தடை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்  இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள்  கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

மஜக பொருளாளர் அவர்களின் கண்டன உரையில் குறிப்பாக பாசிசத்திற்கு எதிராக பிற்படுத்தபட்டோரும், ஒடுக்கபட்டோரும், நாத்திகர்களும், சேர்ந்து வேரறுப்போம் என்றும், முத்தலாக் தடை சட்டம் இந்திய இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்றார்.

இஸ்லாம் வழங்ககூடிய ஷரியத் சட்டம் அழகிய வாழ்வியல் நெறிமுறையை சூட்டிக்காட்டியிக்கிறது. இது போன்ற அழகிய சட்டங்கள் எந்தவொரு மார்க்கத்திலும் கிடையாது என்றும் இந்த சட்டத்தை உணர்ந்த பிற சமூக மக்களும் ஷரியத் சட்டத்திற்காக குரல் கொடுத்து வருகிறார்கள் என்பதை தெளிவாக பேச்சில் சுட்டிக்காட்டினார்.

இதில் மஜகவின் அவைத் தலைவர் சம்சுதீன் நாசர் உமரி, மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் அமீன், கிருஷ்ணகிரி மேற்கு  மாவட்ட செயலாளர் முஹம்மது ஆரிப், மாவட்ட பொருளாளர் சையத் நாவஸ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செய்யது அபுதாஹிர், மன்னிவாக்கம் யூசுப் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களை சேர்ந்த தலைவர்களும், மார்க்க அறிஞர்களும் உரையாற்றினார்.

இதில் பல்லாயிரகணக்கானோர் திரண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_கிருஷ்ணகிரி_மேற்கு_மாவட்டம்.
11.01.2018