குவைத்.ஜுன். 02., #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் மார்க்க பிரிவு #இஸ்லாமிய_கலாச்சார_பேரவை (IKP) யின் #இப்தார்_நிகழ்ச்சி கடந்த 31-05-2018 வியாழன் அன்று 4:30 மணியளவில் தஸ்மா டீச்சர் சொசைட்டியில் IKP-யின் மண்டல செயலாளர் சீனி முஹம்மத் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக ரஷாதி அவர்கள் கிராத் ஓதி துவங்கினார். IKP-யின் துணை செயலாளர் நீடுர் சர்புதீன் வரவேற்பு நிகழ்த்த. பிறகு மஜக மண்டல செயலாளர் முத்துகாப்பட்டி ஹாஜா மைதீன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க. பின்பு தாயகத்தில் இருந்து சிறப்பு விருந்தினராக வருகைபுரிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் #SS_ஹாரூன்_ரசீது மற்றும் தலைமை நிர்வாக குழு உறுப்பினர் மௌலவி #JS_ரிஃபாய்_ரஷாதி அவர்களும் சிறப்புரை நிகழ்த்தினர். பின்பு TVS குழுமம் சேர்மேன் #ஹைதர்_அலி அவர்கள் உரை நிகழ்த்த. இறுதியில் கங்கை கோபால் அவர்கள் நன்றியுறை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். #மனிதநேய_கலாச்சார_பேரவை. #மனிதநேய_ஜனநாயக_கட்சி. #MJK_IT_WING. #MKP_குவைத்_மண்டலம். 55278478-60338005-65510446.
IKP – இஸ்லாமிய கலாச்சார பேரவை
இஸ்லாமிய கலாச்சார பேரவையின் ரியாத் மண்டல ஆலோசனை கூட்டம்..!
ரியாத்.மே.11., இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) ரியாத் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நசிரியா பகுதியில் மண்டல செயலாளர் A.ஹாஜா கமருதீன் அவர்கள் தலைமையில் இன்று (11-05-2018) காலை 8:00 மணியளவில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் முன்னால் தலைமை ஆலோசகர் ஜனாப் நாகை என்.எஸ்.ஹமீது, துணை செயலாளர் S.முஹம்மது நிவாஜிதீன், மருத்துவ அணி S.யூசுப்தீன், மண்டல ஒருங்கிணைப்பாளர் J.சாதிக் பாட்ஷா ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் எதிர்வரும் ரமளான் மாத இஃப்தார் நிகழ்ச்சிகள் சம்மந்தமாக ஆலோசிகப்பட்டது. தகவல்; #இஸ்லாமிய_கலாச்சார_பேரவை #IKP_ரியாத்_மண்டலம் #IKP_IT_WING 11.05.2018
IKP தம்மாம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!
தம்மாம்.ஜன.07., இஸ்லாமிய கலாச்சார பேரவை IKP தமாம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடந்த (05.01.2018) வெள்ளிக்கிழமை அன்று தம்மாமில் உள்ள ஹாலிடே ஹோட்டலில் மிக சிறப்பாக நடைபெற்றது. மண்டல மூத்த நிர்வாகி ஹாஜராஜ் முகைதின் அவர்கள் தலைமையில், செய்யது ஹமீது அவர்கள் முன்னிலையிலும் வகித்தார்கள். மண்டல செயலாளர் செய்யது அலி அவர்கள் மண்டல செயல்பாடுகள் குறித்தும், வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்தும், அதற்கு தமிழகத்தில் கேரளாவை போன்று தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் அப்படி அமைந்தால் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி விரிவாக பேசினார்கள். அடுத்து பேசிய மண்டல பொருளாளர் ஹஜ் முஹம்மது அவர்கள் மண்டல களப்பணிகள் குறித்தும், வளர்ச்சி பணிகள் குறித்தும், விளக்கமாக பேசினார்கள். அதை தொடந்து கிளை நிர்வாகிகள் கருத்துகள் கேட்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் மண்டல செயலாளர் விடுமுறையில் தாயகம் செல்வதால் இந்த கூட்டத்தில் மண்டல துணை செயலாளர் ஆவூர் ஜாகிர் உசேன் அவர்கள் தற்காலிக மண்டல பொருப்பாளராக தேர்வு செய்தார்கள். உதவி பொறுப்பாளர்களாக அஜீஸ் பாய் அவர்களும் முகம்மது இலியாஸ் அவர்களும் நியமனம் செய்யப்பட்டார்கள். தீர்மானம். தமிழக சட்டப்பேரவையில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்க
ரியாத் IKP மண்டல மருத்துவ அணி செயலாளர் நியமனம்!
ரியாத் மண்டலம் இஸ்லாமிய கலாச்சார பேரவையின் மண்டல மருத்துவ அணி செயலாளராக சகோ. யூசுப்தீன்அவர்கள் நியமனம் செய்யபடுகிறார். மனிதநேய சொந்தங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொள்கிறோம். தகவல்: #இஸ்லாமிய_கலாச்சார_பேரவை #IKP_ரியாத் மண்டலம் 03.12.17
ரியாத் IKP மண்டல ஆலோசகர் நியமனம்!
ரியாத் மண்டலம் இஸ்லாமிய கலாச்சார பேரவையின் ரியாத் மண்டல ஆலோசகராக சகோ. அவுலியா முகம்மது அவர்கள் நியமனம் செய்யபடுகிறார். மனிதநேய சொந்தங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொள்கிறோம். தகவல்: #இஸ்லாமிய_கலாச்சார_பேரவை #IKP_ரியாத் மண்டலம் 03.12.17