சென்னை.ஜுன்.03., சென்னை பனையூரில் உள்ள கவிக்கோ அவர்களின் இல்லத்திற்க்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினரும்மான M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வருகை தந்து அவரது உடலை பார்வையிட்டு மரியாதை செலுத்தினார்கள். மறைந்த கவிக்கோ மகள் வழி பேரன் டாக்டர் நசிர் அவர்களிடம் அவரது கடைசி நிமிடங்கள் பற்றி கேட்டறிந்தார்கள். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு பிறகு அங்கிருந்த இரங்கல் பதிவேட்டில் தனது கருத்துகளை பதிவு செய்தார். அதில், சிந்தனை என்னும் ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்த பேரறிஞர் என்றும் காந்த வரிகளாலும், கந்தக சொற்களாலும் தமிழ் இலக்கிய உலகை வழிநடத்தியவர் என்றும், உலகின் சன்னலை தமிழ் இலக்கிய உலகிற்கு திறந்து காட்டியவர் என்றும் புகழாரம் சூட்டி இரங்கலை பதிவு செய்தார். அவருடன் மாநில விவசாய அணி செயலாளர் முபாரக், நாகை தெற்கு மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி, சகோ.ஜெய்னுதீன் ஆகியோர் உடன் இருந்தார்கள். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING சென்னை. 02.06.2017.
மஜக விவசாய அணி
நாகை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் அவர்களுடன் தமிமுன் அன்சாரி MLA சந்திப்பு!
இன்று நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் புதிதாக பொறுப்பேற்றுள்ள நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் அவர்களையும் , மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சேகர் தேஷ்முக் அவர்களையும் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தார். பின்பு அவரது அலுவலகத்திற்கு சென்று மக்களின் குறைகளை கேட்டு மனுக்கள் பெற்றார். உடன் மஜக மாநில விவசாய அணி செயலாளர் செய்யது முபாரக், மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதீன், தலைமை செயற்குழு உறுப்பினர் சதக்கதுல்லா, மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முஹம்மது சுல்தான், நாகை நகர செயலாளர் சாகுல் ஹமீது , நகர துனை செயலாளர்கள் அப்துல் மஜீது, முஹம்மது ஜாசிம் உடனிருந்தனர். தகவல்: நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 02.06.2017
மாடு விற்பனையில் கட்டுப்பாடு மஜகவின் சார்பில் நாகையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…
நாகை.மே.31., நாகப்பட்டினம் தெற்கு மாவட்டம் சார்பாக நாகை புதிய பேருந்து நிலையத்தில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்த மத்திய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் S.செய்யது ரியாசுதீன் தலைமை தாங்கினார், மாவட்ட துணை செயலாளர் AHM.ஹமீது ஜெகபர் வரவேற்புரையாற்றினர், மாவட்ட பொருளாலர் பரக்கத் அலி, மாநில செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, மாவட்ட துணை செயலாளர்கள் ஷேக் மன்சூர், யூசுப்தின், மாவட்ட அணிச் செயலாளர்கள் தெத்தி ஆரிப், பிஸ்மி யூசுப், ரெக்ஸ் சுல்தான், ஓன்றிய செயலாளர் ஏனங்குடி முஜிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாநில துணைச் செயலாளர் H. ஷேக் அப்துல்லாஹ் தொடங்கி வைத்தார். மாநில விவசாய அணி செயலாளர் N.செய்யது முபாரக், மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜிதீன், மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் காதர் பாட்சா ஆகியோர் கண்டன உரையற்றினார்கள். மற்றும் நாகை நகர செயலாளர் சாகுல் ஹமீது, வேதை நகர செயலாளர் ஷேக் அஹமதுல்லா, திட்டச்சேரி போரூர் செயலாளர் ரிஸ்வான், நாகூர் நகர துனை செயலாளர் இப்ராஹீம், நாகை ஒன்றிய துணை செயலாளர் பாவா சாஹிப் மற்றும் நகர
கமலாபுரத்தில் மஜகவின் புதிய கிளை உதயம்…
திருவாரூர்.மே.21., திருவாரூர் மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை கமலாபுரத்தில் இன்று 21/05/2017 துவங்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக் அவர்கள் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் அத்திக்கடை லியாகத் அலிமற்றும் அடியக்கமங்கலம் நிஜாமுதீன், மாவட்ட விவசாய அணி செயலாளர் நத்தர் கனி, மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் புலிவலம் ஷேக் அப்துல்லா, மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் கூத்தாநல்லூர் ஜபுருல்லாஹ், பொதக்குடி கிளை செயலாளர் ஜமால் முகம்மது மற்றும் புலிவலம் கிளை செயலாளர் சேத்தப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.. இதில் முக்கிய நிகழ்வாக அமல்ராஜ், அன்புராஜ், ஐயப்பன், ராஜ்கிரண், சரண்ராஜ், கவியரசன், பிரசாத், பிரவீன்ராஜ், ரகுவரன், மற்றும் முரளி ஆகியோர் 11 நபர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் தங்களை இணைத்துக்கொண்டனர். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி திருவாரூர் மாவட்டம் #MJK_IT_WING 21.05.2017
நாகை சட்டமன்ற அலுவலகத்தில் மோர் மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு!
நாகை.மே.07., சுட்டெரிக்கும் வெயிலின் தாகம் தீர்க்க பொதுமக்களின் சேவைக்காக நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி.MA.,MLA., அவர்களின் ஆலோசனைக்கிணங்க சட்டமன்ற அலுவலகத்தில் நாகை நகர மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் 07-05-2017 இன்று மோர் மற்றும் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. மாநில துணைச்செயலாளர் தோப்புத்துறை சேக் அப்துல்லா அவர்கள் கலந்துகொண்டு பந்தலை திறந்துவைத்தார். மாநில விவசாய அணியின் செயலாளர் நாகை முபாரக், மாநில செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி, மாவட்ட துணை செயலாளர் தோப்புத்துறை சேக் மன்சூர், நாகை நகர செயலாளர் கண்ணுவாப்பா என்கிற சாகுல் ஹமீது, நகர பொருளாளர் அஜீஸ் ரஹ்மான் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நாகை நகர மஜக சார்பில் ஒரு மாதத்திற்கு மேலாக பொதுமக்களுக்கு தினமும் மோர், குளிர்பானங்கள் மற்றும் பழங்கள் வழங்கப்படும். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING நாகப்பட்டினம் மாவட்டம் 07-05-2017