தஞ்சை. டிச.07., தஞ்சை மத்திய மாவட்டம் மஜக சார்பாக டிசம்பர் 6 பாபர் மசூதி மீட்பு போராட்டம் மாவட்ட செயலாளர் அகமது கபீர் தலைமையில் நடைபெற்றது. இதில் மஜக மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக், தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அய்யனாபுரம் முருகேசன், தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகி மணிமொழியன், நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் அ.நல்லதுரை, AITUC சார்பில் துரை மதிவாணன், விடுதலை தமிழ் புலிகள் நிர்வாகி அருண் மாசிலாமணி, காவிரி உரிமை மீட்பு குழு பழனிராசன், தமிழ்நாடு மாணவர் இயக்கம் பிரபாகரன், C.P.M.L மக்கள் விடுதலை நிர்வாகி அருண்சோரி ஆகியோர் கியோர் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட துணை செயலாளர் முகைதீன், மாநகர செயலாளர் அப்துல்லா, ஹனபியா பள்ளிவாசல் ஜமாத் தலைவர் முகம்மது அப்பாஸ் மற்றும் பெண்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தஞ்சை_மத்திய_மாவட்டம். 06.12.17
மஜக விவசாய அணி
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் மஜக பங்கேற்பு!
சென்னை.நவ.04., சென்னையில் தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் P.R.பாண்டியன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. நடிகர் கமல்ஹாசன், பேராசிரியர். டாக்டர். S. ஜனகராஜன் ஆகியோர் விவசாயிகளை சந்திக்ககூடிய பிரச்சனைகள் பற்றி விரிவாக பேசினர். இதில் மஜக சார்பாக மாநில செயலாளர் சாதிக் பாட்சா, மாநில துணை செயலாளர் ஷமிம் அகமது, மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை.முபாரக் ஆகியோர் கலந்து கொண்டனர். #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சென்னை 04.11.2017
பரங்கிப்பேட்டையில் மஜக பொதுச்செயலாளருக்கு உற்சாக வரவேற்பு!
கடலூர்.செப்.27., இன்று கடலூர் தெற்கு மாவட்டம் பரங்கிப்பேட்டைக்கு இன்று வருகை தந்த மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு பரங்கிப்பேட்டை மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருடன் மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதின், மாநில துணைச் செயலாளர் புதுச்சேரி அப்துல் சமது, மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக் உள்ளிட்டோர் உடன் வருகை தந்தனர். புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்து சென்று மூன்று இடங்களில் மஜக கொடி ஏற்றப்பட்டது. பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA இரண்டு இடங்களிலும், மாநில செயலாளர் தஜூதீன் ஒரு இடத்திலும் கொடியை ஏற்றிவைத்தனர். கடைவீதிகளில் ஊர்வலமாக சென்ற போது ஆங்காங்கே பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும் இடைமறித்து பொதுச்செயலாளர் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். பிறகு பரங்கிப்பேட்டை ஐக்கிய ஜமாத் சார்பில் பொதுச்செயலாளர் அவர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. இதில் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் பொதுச்செயலாளர் அவர்களின் சட்டமன்ற செயல்பாடுகளை மனம்திறந்து பாராட்டினர். மேலும் மத்திய NIA உளவுத்துறையால் பரங்கிப்பேட்டை பொதுமக்கள் அடிக்கடி தொந்தரவுக்கு ஆளாவதாகவும் புகார் கூறினர். இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசுவதாகவும் பொதுச்செயலாளர் அவர்கள் பதிலளித்தார். அதன் பிறகு மக்ரிப்
கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் கூட்டம்! கோவை மஜக பொதுக் கூட்டத்தில் பேரெழுச்சி! தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் முழக்கம்!
கோவை.செப்.24., கோவையில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் "பாஸிஸத்தை வீழ்த்துவோம் சமூக நீதியை பாதுகாப்போம்" என்ற முழக்கத்தோடு எழுச்சி மிகு பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. கோவை மாநகரம் முழுக்க மஜகவின் கொடிகளும், பேனர்களும், விதவிதமான சுவரொட்டிகளும் ஒரு மாநாட்டை நினைவூட்டும் வகையில் இருந்தது. 7 மணிக்கெல்லாம் வின்சென்ட் சாலையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கட்டிடங்களின் மாடிகளில் மக்கள் கூட்டம் குடும்பம், குடும்பமாக நின்று வரவேற்றது. உணர்வுப்பூர்வமான தீர்மானங்களுடன் பொதுக்கூட்டத்தில் கவுண்டர் சமுதாய மக்களும், தேவர் சமுதாய மக்களும், முஸ்லிம் சமுதாய மக்களும், தலித் சமுதாய மக்களும் அண்ணன்-தம்பிகளாய் கூடி எழுச்சியை வெளிப்படுத்தியது. இது கோவையில் மிகப்பெரும் சமூக நல்லிணக்கத்தை வலிமைப்படுத்தும் விதமாக அமைந்தது. சங்பரிவார அமைப்புகள் அந்த மண்ணில் பிளவுகளை ஏற்படுத்திய காலம் போய், பல்வேறு சமுதாய மக்களும் சகோதரர்களாக ஒரு திருவிழாவில் ஒன்று கூடுவது போல கூடியிருந்தது. இந்த அரிய சாதனையை செய்த மஜகவை அனைவருமே பாராட்டினர். இதில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சேது கருணாஸ் MLA
ஹாஜிகள் வழியனுப்பு நிகழ்ச்சி..! மஜக பொதுச் செயலாளர் பங்கேற்பு..!!
சென்னை.ஆக.20., சென்னை விமான நிலையத்தில் இன்று விடிகாலை மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை செல்லும் புனித பயணிகளை தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் விமான நிலையத்திற்கு வருகைதந்து புனித பயனிகளை வழியனுப்பும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். வடபழனி பள்ளிவாசல் தலைமை இமாம் தர்வேஸ் ரஸாதி அவர்கள் " தக்பீர் " எழுப்பி பயணிகளுக்கு அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். உறவினர்களின் கண்ணீர் வழியும் தழுவல்களுக்கு பிறகு, பயணிகள் இறையில்லமாம் காபாவை தரிசிக்கப்போகும் உணர்ச்சிகரமான நிலையில் புறப்பட்டனர். தமிழக ஹஜ் கமிட்டி சார்பில் இவ்வருடம் புறப்பட்ட 8வது சவூதியா விமானத்தில் 300பேர் புறப்பட்டனர். நிறைவாக M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் விமான நிலையத்தின் உட்பகுதிக்கு சென்று , நிர்வாக பணிகள் குறித்து பயணிகளுக்கு ஏதேனும் தேவை இருக்கிறதா? எனக் கேட்டறிந்தார். தமிழ்நாடு ஹஜ் கமிட்டி அதிகாரிகளிடம் சேவை பணிகள் குறித்தும் ஆலோசனைகளை கூறினார். இந்நிகழ்வில் மஜக மாநில செயலாளர் N.A.தைமியா, மாநில துணை செயலாளர் ஷமீம் அஹமது, மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், அமீரக IT-Wing செயலாளர் ஜியாவுல் ஹக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தலைமையகம், சென்னை 20.08.17