ஏப்ரல்.25., இன்று சுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு. திரு. விஜயபாஸ்கர் அவர்களுடன் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் அலைபேசியில் உரையாடினார். தற்போது அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொடர்பில் கிசிச்சைப் பெற்று வரும் நோயாளிகளின் நலம் குறித்து விசாரித்தார். முதலில் "பாசிட்டிவ்" ஆனவர்கள், 14 நாட்களுக்கு பிறகு அடுத்தடுத்து "நெகட்டிவ்" ரிசல்டை பெற்றால், அதிகபட்சமாக 28 நாட்களில் வீடு திரும்புவார்கள் என்றும், அவர்கள் வீட்டில் அடுத்த இரு வாரங்கள் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் விளக்கினார். தற்போது உரிய கிசிச்சை காரணமாக விரைவாக பலர் குணமடைந்து வருவதாகவும், சதவீத அடிப்படையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இந்த முன்னேற்றம் என்றும் கூறினார். ஒவ்வொருவரின் நலன் கருதி மிகுந்த ஈடுபாட்டோடு கிசிச்சை அளிக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார். அவருக்கு பாராட்டுகளை தெரிவித்த பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள், முழுமையாக கிசிச்சைப் பெற்றவர்கள் விரைந்து வீடு திரும்ப வேண்டும் என்பதே உறவினர்களின் விருப்பம் என்பதை சுட்டிக்காட்டினார். அதை கவனத்தில் கொண்டு தமிழகம் முழுக்க கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் கூறினார். தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING 25-04-2020
கொரோனா வைரஸ்
காவல்துறையினருக்கு நோய்எதிர்ப்பை அதிகரிக்கும் மூலிகை தொகுப்பு : சஞ்சீவிபார்மா உடன் இணைந்து நெல்லை மாநகர் மஜகவினர் வழங்கினர்!
ஏப்ரல்.24., நெல்லை மாநகர் மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் சஞ்சீவி பார்மா இணைந்து ஊரடங்கிலும் தொடர்ந்து பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சித்த மூலிகை மருந்துகளான கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் தயாரிக்கும் சூரணப்பொடிகள் மற்றும் ஆடாதோடா, மனப்பாகு உள்ளிட்ட சஞ்சீவியின் மூலிகை தொகுப்புகளை நெல்லை மாநகர துணை ஆணையாளர் திரு. சரவணன் அவர்களிடம் 400 காவலர்களுக்கு வழங்கும் வகையில் அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மஜக-வின் மாநகர செயலாளர் நெல்லை நிஜாம், பொருளாளர் பேட்டை மூஸா, துணைச் செயலாளர்கள் பீர்முஹம்மது, அலாவுதீன் மற்றும் நெல்லை பகுதி செயலாளர் கலீல் உள்ளிட்டோர் செய்தனர். தொடர்ந்து சஞ்சீவி பார்மாவின் தென்மண்டல மேலாளர் A. குல்முஹம்மது அவர்கள் கலந்துக் கொண்டு மருந்தின் நன்மைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநகரச் செயலாளர் நெல்லை நிஜாம் அவர்கள் கூறும்போது... மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களின் ஆலோசனையின் பேரில், தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என அடுத்தக்கட்டமாக மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்வதற்கானப் பணிகள் நடைப்பெற்று வருகிறது என்று தெரிவித்தார். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நெல்லை_மாநகர் 24-04-2020
கொரோனா பரிசோதனை முடிந்தவர்களை விரைந்து வீட்டுக்கு அனுப்பவேண்டும்! முதமிமுன்அன்சாரி MLA கோரிக்கை!
கொரோனா பரிசோதனை கிசிச்சை பெற்று நலன் பெற்றவர்கள் பலர் தங்களை இன்னும் ஏன் வீட்டுக்கு அனுப்பவில்லை? என கேட்கிறார்கள். முதல் பரிசோதனையில் " பாசிட்டிவ் " என ரிசல்ட் பெற்றவர்கள், கிசிச்சைக்கு பிறகு அடுத்த இரு சோதனைகளில் "நெகட்டிவ் " என ரிசல்ட் பெறுகிறார்கள். அவர்களை போன்றோரை வீட்டுக்கு அனுப்பி இரண்டு வாரங்கள் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்பது வழிகாட்டலாக உள்ளது. அத்தகைய பலர் 25 நாட்களை கடந்த பின்னாலும் எங்களை ஏன் வீட்டிற்கு அனுப்ப வில்லை? என கேட்கிறார்கள். ஏற்கனவே அவர்கள் உளவியல் சிக்கலில் இருக்கும் போது, அவர்களை மேலும் தாமதப்படுத்துவது உகந்ததல்ல. எனவே, உரிய கிசிச்சைப் பெற்றவர்கள், தாமதமின்றி வீடு திரும்பவும், வீட்டிலேயே அடுத்த இரு வாரங்கள் தங்கி கண்காணிப்பில் இருக்கவும் தமிழக சுகாதாரத் துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA., பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி. 24.04.2020
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையிலிருந்து கொரொனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் வழியனுப்பிவைப்பு!!
அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் மஜகநிர்வாகிகள் பங்கேற்பு!! கோவை:ஏப்.24., கோவையில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோர் அதிலிருந்து குணமடைந்து வருகிறார்கள். அதை தொடர்ந்து கோவை இஎஸ்ஐ மருத்துவமனைலிருந்து இன்று 38நபர்கள் டிஸ்சார்ஜ் செய்து வழியனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை அமைச்சர் S.P.வேலுமணி, மாவட்ட ஆட்சியர் ராசாமணி, இஎஸ்ஐ மருத்துவ மனை முதல்வர் டாக்டர், நிர்மலா, கோவை அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர், காளிதாஸ், மாநகர காவல் துணை ஆணையர் பாலாஜி சரவணன், மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச் செயலாளர் கோவை சுல்தான்அமீர், ஆகியோர் பழக்கூடைகள் வழங்கி கரவொலிகள் எழுப்பி அவர்களை வழியனுப்பி வைத்தனர். இதில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், IKP மாநில செயலாளர் லேனா இஷாக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன்,சுவனம் அபு. மற்றும் தமுமுக, மமக, ஜாக், முஸ்லிம்லீக், ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம் 24.04.2020
கொரோனாவைரஸ் தடுப்பு நடவடிக்கை!! மஜகசார்பில் சங்கரன்கோவிலில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது!!
தென்காசி.ஏப்.24., கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம். சங்கரன்கோவில் மஜக சார்பில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் வழங்கி கொரோனா வைரஸ் குறித்த விழிப்பணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் நகரச் செயலாளர் சுல்தான், நகரப் பொருளாளர் இத்ரீஸ், நகர இளைஞர் அணி செயலாளர் தர்வீஸ் மைதீன், நகர வர்த்தக அணி செயலாளர் ராஜா முஹம்மது, நகர நிர்வாகிகள் மற்றும் மாணவர் இந்தியா மாவட்டச் செயலாளர் அ.பீர் மைதீன் ஆகியோர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தென்காசி_மாவட்டம் #24.04.2020