கடந்த 41 நாட்களாக தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் சில நிபந்தனைகளுடன் நேற்று முதல் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனால் முக்கியமாக பின்பற்றப்பட வேண்டிய சமூக இடைவெளி பின்பற்றப்படாமல் கூட்டம் கூட்டமாக மக்கள் கடை வீதிகளில் அலைவதை பார்க்கும் போது இத்தனை நாள் பின்பற்றிய ஊரடங்கின் பயன் வீணாகி கொரோனா நோய் தொற்று அதிகரித்து விடுமோ என்ற சமூக கவலை அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது. எந்தெந்த கடைகளை திறப்பது என்பதிலும், நேர வரையரையிலும் குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகள் மே-7 முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது கடும் வேதனையளிக்கிறது. மதுப்பழக்கம் உள்ளவர்களில் அறுதிப் பெரும்பான்மையினர் மனமாற்றத்திற்கு உள்ளாகியிருக்கும் நிலையில், தமிழக அரசு இவ்வாறு அறிவித்திருப்பது பொது மக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. வழிபாட்டு தலங்களை திறக்கக் கூடாது என்றும், முடிவெட்டும் சலூன் கடைகளை திறக்கக் கூடாது என்றும் கூறி விட்டு, சாராயக் கடைகளை திறக்க அனுமதிப்பது வேடிக்கையாக இருக்கிறது. டாஸ்மாக் கடைகளில் குடிகாரர்களிடம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க எவ்வாறு வலியுறுத்த முடியும்? அது சாத்தியமா? இவையாவும் நிலைமையை மோசமடைய செய்து, முழு தமிழகத்தையும் சிவப்பு மண்டலமாக மாற்றவே துணை போகும். எனவே தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும்
கொரோனா வைரஸ்
பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களுக்கு எதிரானது : முதமிமுன்அன்சாரி MLA கண்டனம்
கொரோனா காரணமாக நாடும், மக்களும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது, பன்னாட்டு சந்தையின் விலைக்கேற்ப பெட்ரோல் - டீசல் விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுகின்றன. இந்நிலையில், மத்திய - மாநில அரசுகள் இவற்றின் விலையை அதிகரிக்க செய்திருப்பது கண்டனத்திற்குரியது. தமிழக அரசு நேற்று முதல், பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் 25 காசும், டீசல் ஒரு லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசும் என மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தி அறிவித்திருக்கிறது. ஏற்கனவே கடந்த மாதம் மத்திய அரசு, இவ்விரண்டிற்குமான கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இம்மாத நிலவரப்படி, பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 26 டாலர் என சரிவை சந்தித்திருக்கிறது. எண்ணெய் உற்பத்தி செய்யும் 'ஒபெக் ' நாடுகள், கச்சா எண்ணெய் விற்பனை ஆனால் போதும் என்ற நிலையில் உள்ளன. இச்சூழலில் அவற்றின் பலன் நம் மக்களுக்கு போய் சேராதபடி மத்திய - மாநில அரசுகள் விலை ஏற்றங்களுக்கு வழிகோலுவது சரியல்ல. இதன் மூலம் எண்ணெய் இறக்குமதி மற்றும் சுத்திகரிப்பில் ஈடுபட்டு வரும் கார்ப்பரேட் முதலாளிகள் மேலும்,
இப்போது 20 ஆயிரம் கோடியில் பாராளுமன்ற கட்டிடம்தேவையா? முதமிமுன்அன்சாரி MLAஅறிக்கை!
கொரணா தொற்று நோயால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், நாட்டு மக்களுக்கு மத்திய அரசு நேரடி நிதி உதவிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால், பிரதமர் அவர்கள் தனது உரைகளில் அறிவுரைகளை மட்டுமே கூறுகிறார். நிவாரண உதவிகள் பற்றி வாய் திறப்பதில்லை. தன் ஆளுமையை நிலை நாட்டுதல், அரசியல் பெருமையை தேடுதல் ஆகியவைத் தான் அவரது உரைகளின் நோக்கமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. தற்போது பட்டினிச் சாவுகளும், கெளரவ தற்கொலைகளும் நாடெங்கிலும் உருவாகிவிடுமோ என மக்கள் அஞ்சுகின்றனர். இந்நிலையில், கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் பெரும் புள்ளிகளின் 68 ஆயிரத்து 607 கோடி ரூபாய் வங்கி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட செய்தி நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. சிறு, குறு தொழிலுக்கு கடன் பெற்றவர்கள், விவசாய இயந்திரங்களுக்கு கடன் பெற்றவர்கள், மீன்பிடி படகுகளுக்கு கடன் பட்டவர்கள், 5 லட்சம் ரூபாய்க்கு குறைவாக கடன் பெற்றவர்கள் என பலரும் வதைக்கப்படும் நிலையில் பெருமுதலாளிகள் காப்பாற்றப்பட்டுள்ளது என்ன நியாயம்? என மக்கள் கேட்கிறார்கள். இச்சூழலில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அனுமதி அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இன்றைய
மஜக சார்பில்ஊரடங்கால் சிரமத்திற்குள்ளாகும் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவி!
ஏப்.27, நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி கிளை சார்பாக ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரங்கள் இழந்து முடங்கி கிடக்கும் பல்வேறு தரப்பு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும், நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுர குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக இன்றும் எழுபத்தைந்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் மஜக சார்பில் வழங்கப்பட்டது. இதில் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு பயனாளிகளின் இல்லங்களைத் தேடிச் சென்று உதவிகளை வழங்கினர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகை_மாவட்டம்.
மஜக பொள்ளாச்சி நகரம் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் பலர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி பொள்ளாச்சி நகரத்தின் சார்பில் கட்சியில் பணியாற்றக்கூடிய ஏழ்மை நிலையில் உள்ள பயனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு ரூ.2150 மதிப்புள்ள ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் சுமார் 50பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதில் பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜாஜெமீசா, நகர பொருளாளர் முகமது பஷீர், நகர துணைச் செயலாளர் அன்சர், நகர இளைஞரணி செயலாளர் அலாவுதீன், பொருளாளர் இஸ்மாயில், துணைச் செயலாளர்கள் சௌகத், அபிப் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாவட்டம் 24.04.2020