ஏப்ரல் 02, இன்று நாகை தொகுதியில், மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தீவிர கள ஆய்வுகளை மேற்கொண்டார். காலை 10.30 முதல் மாலை 4.30 மணி வரை திட்டச்சேரி பேரூராட்சி மற்றும் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை சந்தித்து கொரனா முன் எச்சரிக்கை பணிகள் குறித்து கேட்டறிந்தார். முதலில் திட்டச்சேரியில் ஆய்வை மேற்கொண்டார். அங்கு கிசிச்சைக்கு வந்தவர்களிடமும் உரையாடினார். பிறகு திருமருகல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ஏனங்குடி, திருக்கண்ணபுரம், கணபதிபுரம், திருப்பயத்தாங்குடி ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் சென்று டாக்டர் மற்றும் செவிலியர்களை சந்தித்து பணிகள் குறித்து கேட்டறிந்தார். தற்போது அவர்களின் பணிகள் மக்களால் போற்றப்படுகிறது என்றும் பாராட்டினார். மருத்துவ தேவைகள் எதுவாயினும் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார். இன்று திருமருகல் தாலுகா, திட்டச்சேரி பேருராட்சியிலும் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார மையங்களுக்கும் அவர் வருகை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. அங்கு சந்தித்தவர்களிடம் சமுக இடைவெளியை அனைவரும் கடைப்பிடிக்க கேட்டுக்கொண்டார். அவருடன் ஒன்றிய பெருந்தலைவர் ராதா, திட்டச்சேரி ரியாஸ், முன்ஷி, நியாஸ், முபீன் ஆகியோரும் உடன் சென்றனர். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர்
கொரோனா வைரஸ்
கோவையில் பாதுகாப்புபணியில் ஈடுபட்டு வரும்!! காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய மஜகவினர்!!
கோவை: ஏப். 02., கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக நாடுமுழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து கோவை மாநகர் முழுவதும் கடும் வெயிலை பொருட்படுத்தாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் காவலர்கள் மற்றும் சாலையோர பொதுமக்கள், வட மாநில தொழிலாளர்கள், உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோருக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் உணவுகள் வழங்கப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது ஊரடங்கின் காரணமாக உணவு கிடைப்பது சிரமமாக உள்ளது இந்நிலையில் தாங்கள் எங்களை போன்றோரை தேடி வந்து உணவளித்ததற்கு நன்றி தெரிவித்தனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம் 02.04.2020
மேலாப்பாளையம் திண்டுக்கல் பேகம்பூர் நிலவரம்.! உயர்அதிகாரிகளிடம் மஜக பொதுச்செயலாளர் தமிமுன்அன்சாரி MLA பேச்சு.!!
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் ஆகிய ஊர்களை கொரோனா வலையத்தில் சுகாதாரத்துறை வைத்திருப்பதாக செய்திகள் வருகிறது. அங்கு மருத்துவம் மற்றும் அத்தியாவாசிய தேவைகள் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுவதாக புகார்கள் மஜக-வுக்கு வந்தது. மேலப்பாளையத்தில் அத்தியாவசிய தொடர்புகள் கிடைக்காமல் தனிமைப்படுத்திருப்பதாக மஜக இணை பொதுச்செயலாளர் J.S.ரிபாய் அவர்கள் தமிமுன் அன்சாரி MLA., அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார். அதுபோல் திண்டுக்கலிருந்தும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் முதல்வர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்ததோடு காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் பேசினார். இப்பகுதிகளில் மருத்துவ சேவைகளும், அத்தியாவசிய பணிகளும் பாதிக்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி. #MJK_IT_WING 02/04/2020
கொரோனாநோய் எதிர்ப்புசக்திக்காக கபசுர குடிநீர்! மஜக சார்பில் தயாரித்து விதிமுறைகளை பேணி விநியோகம்!
ஏப்.02, நாகை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திட்டச்சேரி பேரூர் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கபசுர குடிநீரை தயாரித்து முதற்கட்டமாக அங்காடி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்ற மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இக்குடிநீரானது, கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கைகாக நோய் தாக்காத நபர்கள் கபசுர குடிநீரை பயன்படுத்திட தமிழக அரசின் சுகாதாரத் துறை வழங்கிய அறிவுரையை ஏற்று அரசு மருத்துவமனைகளில் இயங்கும் சித்த மருத்துவ பிரிவின் சார்பில் இக்குடிநீர் மருத்துவமனை வளாகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. சமூக விலகலை கடைப்பிடித்து கூட்டம் சேராமல் விநியோகம் செய்யும் பணி திட்டச்சேரி பேரூர் பொருளாளர் முகம்மது சதாம் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது. தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகை_மாவட்டம். 02.04.2020
மஜக பெரம்பலூர் மாவட்டம் சார்பாக அத்தியாவசிய பொருள் விநியோகம்
பெரம்பலூர்.ஏப்ரல்.01., ஊரடங்கு காரணமாக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை கேட்டறிந்து அதற்கேற்றார் போல அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மஜக பெரம்பலூர் மாவட்டம் சார்பாக லப்பைக்குடிக்காடு, புதுப்பேட்டை, கீழக்குடிக்காடு, அரங்கூர், பெண்ணக்கோனம், திருமாந்துறை, கீரனூர் உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள ஏழ்மையான நிலையில் உள்ள குடும்பத்திற்கு தக்காளி 1kg விதம் சுமார் 1200 குடும்பத்தினருக்கு விநியோகிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு கிலோ 10 ரூபாய்க்கு விற்ற தக்காளி இன்று கிலோ 50க்கு விற்கிறார்கள், அத்தியாவசிய பொருட்களின் விற்பனை விலையை அரசு கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் பலர் சுட்டிகாட்டியது குறிப்பிடத்தக்கது. மேலும் மஜகவினரின் இப்பணியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #பெரம்பலூர்_மாவட்டம்