நாகை தொகுதியில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மு.தமிமுன்அன்சாரி MLA கள ஆய்வு!


ஏப்ரல் 02,

இன்று நாகை தொகுதியில், மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தீவிர கள ஆய்வுகளை மேற்கொண்டார்.

காலை 10.30 முதல் மாலை 4.30 மணி வரை திட்டச்சேரி பேரூராட்சி மற்றும் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை சந்தித்து கொரனா முன் எச்சரிக்கை பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

முதலில் திட்டச்சேரியில் ஆய்வை மேற்கொண்டார். அங்கு கிசிச்சைக்கு வந்தவர்களிடமும் உரையாடினார்.

பிறகு திருமருகல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து ஏனங்குடி, திருக்கண்ணபுரம், கணபதிபுரம், திருப்பயத்தாங்குடி ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் சென்று டாக்டர் மற்றும் செவிலியர்களை சந்தித்து பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

தற்போது அவர்களின் பணிகள் மக்களால் போற்றப்படுகிறது என்றும் பாராட்டினார்.

மருத்துவ தேவைகள் எதுவாயினும் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.

இன்று திருமருகல் தாலுகா, திட்டச்சேரி பேருராட்சியிலும் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார மையங்களுக்கும் அவர் வருகை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

அங்கு சந்தித்தவர்களிடம் சமுக இடைவெளியை அனைவரும் கடைப்பிடிக்க கேட்டுக்கொண்டார்.

அவருடன் ஒன்றிய பெருந்தலைவர் ராதா, திட்டச்சேரி ரியாஸ், முன்ஷி, நியாஸ், முபீன் ஆகியோரும் உடன் சென்றனர்.

தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
02.04.2020