ஆதரவற்றோர் மற்றும் ஏழை எளியோர்க்கு உணவளித்த மஜகவினர்.!

வேலூர்.ஏப்.,02

கொரோனாவை கட்டுபடுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கின்ற காரணத்தினால் அன்றாடம் கூலி வேலைக்குச் செல்கின்ற ஏழை எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவின்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர், இதைத் தொடர்ந்து அடித்தட்டு ஏழை மக்கள், சாலையோரம் வசிப்போர் உணவின்றி தவிக்கக்கூடாது எனும் நல்லெண்ணத்தோடு, ஏழை எளியோருக்கு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் உதவும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக, வேலூர் மாநகர் சார்பில் மஜக-வினர் பிகார் மாநிலத்திலிருந்து வந்து பணிபுரியும் தினக்கூலியினர், ஆதரவற்றோர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கினர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_மாவட்டம்
02-04-2020