நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் ஆகிய ஊர்களை கொரோனா வலையத்தில் சுகாதாரத்துறை வைத்திருப்பதாக செய்திகள் வருகிறது.
அங்கு மருத்துவம் மற்றும் அத்தியாவாசிய தேவைகள் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுவதாக புகார்கள் மஜக-வுக்கு வந்தது.
மேலப்பாளையத்தில் அத்தியாவசிய தொடர்புகள் கிடைக்காமல் தனிமைப்படுத்திருப்பதாக மஜக இணை பொதுச்செயலாளர் J.S.ரிபாய் அவர்கள் தமிமுன் அன்சாரி MLA., அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
அதுபோல் திண்டுக்கலிருந்தும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் முதல்வர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்ததோடு காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் பேசினார்.
இப்பகுதிகளில் மருத்துவ சேவைகளும், அத்தியாவசிய பணிகளும் பாதிக்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி.
#MJK_IT_WING
02/04/2020