ஏப்.02,
நாகை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திட்டச்சேரி பேரூர் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கபசுர குடிநீரை தயாரித்து முதற்கட்டமாக அங்காடி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்ற மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
இக்குடிநீரானது, கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கைகாக நோய் தாக்காத நபர்கள் கபசுர குடிநீரை பயன்படுத்திட தமிழக அரசின் சுகாதாரத் துறை வழங்கிய அறிவுரையை ஏற்று அரசு மருத்துவமனைகளில் இயங்கும் சித்த மருத்துவ பிரிவின் சார்பில் இக்குடிநீர் மருத்துவமனை வளாகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
சமூக விலகலை கடைப்பிடித்து கூட்டம் சேராமல் விநியோகம் செய்யும் பணி திட்டச்சேரி பேரூர் பொருளாளர் முகம்மது சதாம் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது.
தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகை_மாவட்டம்.
02.04.2020