பெரம்பலூர்.ஏப்ரல்.01.,
ஊரடங்கு காரணமாக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை கேட்டறிந்து அதற்கேற்றார் போல அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மஜக பெரம்பலூர் மாவட்டம் சார்பாக லப்பைக்குடிக்காடு, புதுப்பேட்டை, கீழக்குடிக்காடு, அரங்கூர், பெண்ணக்கோனம், திருமாந்துறை, கீரனூர் உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள ஏழ்மையான நிலையில் உள்ள குடும்பத்திற்கு தக்காளி 1kg விதம் சுமார் 1200 குடும்பத்தினருக்கு விநியோகிக்கப்பட்டது.
சில நாட்களுக்கு முன்பு கிலோ 10 ரூபாய்க்கு விற்ற தக்காளி இன்று கிலோ 50க்கு விற்கிறார்கள், அத்தியாவசிய பொருட்களின் விற்பனை விலையை அரசு கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் பலர் சுட்டிகாட்டியது குறிப்பிடத்தக்கது. மேலும் மஜகவினரின் இப்பணியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#பெரம்பலூர்_மாவட்டம்