ஏப்ரல்.01.,
கொரோனாவை கட்டுபடுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கின்ற காரணத்தினால் அன்றாடம் கூலி வேலைக்குச் செல்கின்ற ஏழை எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர் அதனை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் அத்தியாவசிய பொருட்களை தொடர்ந்து விநியோகித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட மஜக-வினர் கடந்த ஒரு வாரமாக தொடர் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று செங்கம் மில்லத் நகர் பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத சூழலில் உள்ள ஏழ்மையான குடும்பத்தினருக்கு, தலா 1000 ரூபாய் மதிப்பிலான அரிசி, பருப்பு, எண்னெய், காய்கறிகள் என வீட்டிற்கு தேவையான அனைத்து மளிகை பொருட்களும் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் நகரச் செயலாளர் ஜே.ஜே.ஜாகீர், நகரப் பொருளாளர் மெடிக்கல் முஸ்தபா, நகர துணைச் செயலாளர் காலு என்கின்ற லியாகத் ஆகியோர் அத்தியாவசிய உணவு பொருட்களை விநியோகித்தனர்.
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருவண்ணாமலை_மாவட்டம்
01-04-2020