மஜக மனு எதிரொலி…! தோப்புத்துறையில் குரங்கு வேட்டை தொடங்கியது!

மே.30., வேதாரண்யம் – தோப்புத்துறை பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் பெருகியதால் பல பாதிப்புகள் உருவாகியுள்ளது.

மரங்களிலிருந்து பழங்களை,காய்கறிகளை சேதப்படுத்துவது ,பொருட்களை தூக்கி செல்வது, குழந்தைகளை அச்சுறுத்துவது என பல பாதிப்புகள் ஏற்பட்டது

சமீபத்தில் மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் வனத்துறையிடம் இது குறித்து புகார் செய்யப்பட்டது.

அதன் பேரில் வனத்துறை முதல் கட்டமாக 8 குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து சென்றுள்ளது.

இவை கோடியக்காட்டில் விடப்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து இதர குரங்குகளையும் பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மஜக வின் சூழலியல் காப்பு முயற்சிக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளன்ர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING,
#நாகை_மாவட்டம்.
29-05-2022