ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடு முழுவதும் முழு வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சியினர் மற்றும் விவசாய சங்கங்களின் சார்பில் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு ஆதரவாக மதுரை மாநகரில் அனைத்து கட்சியினர் மற்றும் விவசாய சங்கங்களின் சார்பில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் இப்ராஹீம், அவர்கள் தலைமையில் திரளான மஜக வினர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை பதிவு செய்தனர். இதில் மாவட்ட பொருளாளர் சசிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் புதூர் கனி, மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் மஜீத், சுலைமான், விவசாய அணி மாவட்ட செயலாளர் சோனை, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பசீர் கான், இளைஞரணி மாவட்ட செயலாளர் சையது அலி, சதாம் உசேன், உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் பங்கேற்றனர். #Istandwithfarmers #mjkstandwithfarmers தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #மதுரை_மாநகர்_மாவட்டம் 27.09.2021
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
உதகையில் விவசாயிகளுக்கு ஆதரவாக மஜக சார்பில் ஆர்ப்பாட்டம்…!
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாடு முழுவதும் பாரத் பந்த் அறிவிக்கப்பட்டு, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் இன்று பரவலாக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மறியல்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு நிகழ்வாக மஜக நீலகிரி கிழக்கு மாவட்டம் உதகை நகரம் சார்பாக அனைத்து கட்சிகள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாவட்ட செயலாளர் கமாலுதீன் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ஹமீத் கண்டன உரையாற்றினார், ஆர்ப்பாட்டத்தில் மாணவர் இந்தியா மாநில செயலாளர் பெரியார் கார்த்திக், மாவட்ட பொருளாளர் காலிப், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் ரிஸ்வான் மாவட்ட துணைச் செயலாளர் அதிப், மனித உரிமை அணி மாவட்டச் செயலாளர் தப்ரேஸ், உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள், மற்றும் தோழமை கட்சியினர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை பதிவு செய்தனர். #IStandWithFarmers #MjkStandWithFarmers தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #நீலகிரி_கிழக்கு_மாவட்டம் 27.09.2021
திருவாரூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக ரயில் மறியல் போராட்டம்! மஜகவினர் பங்கேற்பு!
ஒன்றிய அரசின் மக்கள் விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டு விவசாயிகள் போராடி வருகிறார்கள். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் சார்பாக சிங்களாஞ்சேரியில் ரயில் மறியல் போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட பொருளாளர் அப்துல்லா, அவர்கள் தலைமையில் விவசாய அணி மாவட்ட செயலாளர் நஜிமுதீன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் சித்திக் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை முழங்கினர். #Istandwithfarmers #mjkstandwithfarmers தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருவாரூர்_மாவட்டம் 27.09.2021
மேலூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்! மஜகவினர் பங்கேற்பு!
ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் இன்று பந்த் அறிவிக்கப்பட்டுவிவசாயிகள் போராடி வருகிறார்கள். அதற்கு ஆதரவாக மதுரை மாவட்டம் மேலூரில் அனைத்து கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் முபாரக் அலி, அவர்கள் தலைமையில் மஜக வினர் திரளாக பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட பொருளாளர் செந்தில், விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜலாலுதீன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் செய்யது மஸ்தான், மாணவர் இந்தியா மாவட்ட துணைச் செயலாளர்கள் மஸ்தான் கனி, அசாருதீன், ஒன்றிய நிர்வாகிகள் ஜபருல்லா, கலீல் அஹமது, ஆசிக் அகமது, உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். #Istandwithfarmers #MJKstandwithfarmers தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #மதுரை_புறநகர்_மாவட்டம் 27.09.2021
அந்தியூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக மஜக வினர் போராட்டம்!
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக செப் 27. நாடு முழுவதும் பாரத் பந்த் அறிவிக்க ப்பட்டு, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சி ஈரோடு மேற்கு மாவட்டம் அந்தியூர் நகரத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் A.k.ஷானவாஸ் அவர்கள் தலைமையில், தகவல் தொழிநுட்ப அணி மாவட்ட செயலாளர் முகமது ஷபி, மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் உஸ்மான் அலி, மற்றும் அப்பாஸ், நகர செயலாளர் மைதீன்பேக், நகர பொருளாளர் நிஜார் முகமது, நகர துணை செயலாளர்கள் பிலால், பர்க்கத் துல்லா, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை பதிவு செய்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #ஈரோடு_மேற்குமாவட்டம் 27.09.2021