
ஜூலை.13.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களை பரமக்குடி நகரம், எமனேஸ்வரம் கிளை நிர்வாகிகள் கிளை செயலாளர் ஹபீப் ரஹ்மான் தலைமையில் சந்தித்தனர்.
நிர்வாகிகளிடம் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், கொரோனா பேரிடர் காலத்தில் நடைபெற்ற மக்கள் நல பணிகள் குறித்தும் மாநிலப் பொருளாளர் விரிவாக கேட்டறிந்தார்.
பின்னர் மஜக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
இந்த சந்திப்பில் மாணவர் இந்தியா மாவட்டச் செயலாளர் முஹம்மது ஹனிபா, பரமக்குடி நகரச் செயலாளர் எமனை சாகுல், மாணவர் இந்தியா எமனேஸ்வரம் கிளை செயலாளர் ஜமில், இஸ்லாமிய கலாச்சார பேரவை எமனேஸ்வரம் கிளை செயலாளர் செய்யது சதகி, மற்றும் பாஷித் உடனிருந்தனர்.
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#ராமநாதபுரம்_மாவட்டம்
13-07-2020