ஜூலை.13.,
தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் கடந்த சில நாட்களாக கார்டூனிஸ்ட் வர்மா என்ற நபர் சமூக வளைதளங்களில் நச்சு கருத்துகளை பதிவிட்டு வருகின்றார். இந்நிலையில் நேற்று உலக மக்கள் தங்கள் உயிரினும் மேலாக நினைக்கும் நபிகள் நாயகத்தை தவறாக சித்தரித்து கார்டூன் வரைந்து வெளியிட போவதாக தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக தனது முகநூல் பக்கத்தில் தொடர்ச்சியாக பதிவிட்டு வரும் கார்டூனிஸ்ட் வர்மா மீது நடவடிக்கை கோரி, மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம் சார்பாக மஜக மாநில துணைச்செயலாளர் A.R.சாகுல் ஹமீது தலைமையில் நிர்வாகிகள் நெல்லை மாவட்ட காவல் ஆணையாளரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
புகார் மனுவை பெற்று கொண்ட காவல் ஆணையாளர், இது குறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்டச்செயலாளர் நெல்லை நிஜாம் அவர்கள், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க பாசிச சிந்தனையாளர்கள் திட்டம் தீட்டுவதாகவும், அவர்களுக்கு ஆதரவாக கார்டூனிஸ்ட் வர்மா போன்ற பலர் சமூக வளைதளங்களில் கலவரத்தை தூண்டும் நச்சு கருத்துகளை பரப்பி வருகின்றனர். இப்படியான நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
காவல் ஆணையாளர் சந்திப்பில் மாவட்ட பொருளாளர் பேட்டை மூஸா, மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு அணிச் செயளாலர் N.அப்பாஸ், பாளை பகுதிச் செயளாளர் சேக் அப்துல் காதர் ஆகியோர் உடனிருந்தனர்.
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நெல்லை_மாவட்டம்
13-07-2020