அஸ்ஸாமில் சிபாஜ்ஹாரில் 30 ஆண்டுகளாக குடியிருந்த மக்களை விரட்ட அரச பயங்கரவாதத்தை ஏவிய பாஜக அரசை கண்டித்து இன்று நாகை நகரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர செயலாளர் அஜிஜுர் ரஹ்மான், அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா, மாவட்ட துணை செயலாளர் கண்ணுவாப்பா @சாகுல் ஹமீது, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் ரெக்ஸ் சுல்தான், முன்னிலை வகித்தனர். மாநில துணை செயலாளர் நாகை முபாரக், அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் நகர பொருளாளர் அப்துல் (செல்லத்துரை) மற்றும் மண்டல நிர்வாகி ஃபர் மானுல்லாஹ், ஒன்றிய துணை செயலாளர் மஞ்சை சதாம், நகர நிர்வாகிகள் ஹாஜி அப்துல் காதர், அனாப் ,ரிபாய், அனிஸ், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நாகை_மாவட்டம் 01.10.2021
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
குடியாத்தத்தில் அஸ்ஸாம் அரச பயங்கரவாதத்தை கண்டித்து பதாகை ஏந்தி மஜக ஆர்ப்பாட்டம்!
அஸ்ஸாம் மாநிலம் சிபாஜ்ஹார் என்ற இடத்தில் 30 ஆண்டுகளாக குடியிருந்த சுமார் 500 குடும்பத்தினருக்கும் மேற்பட்ட மக்களை விரட்ட அரச பயங்கரவாதத்தை ஏவிய பாஜக மாநில அரசை கண்டித்து வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பதாகை ஏந்திய ஆர்ப்பாட்டம் நகர செயலாளர் S.அனீஸ் தலைமையில் நடைப்பெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் அஸ்ஸாம் மாநில பாஜக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன இதில் மஜக நகர நிர்வாகிள் சாதிக், உசேன், பிலால், அலீம், கபீர், சுஹேல், முபாரக் ஜெயினுலாப்தீன் அகியோர் கலந்து கொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #வேலூர்_மாவட்டம் 01-10-2021
ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாடு தலைவர் இல்ல திருமண விழா..!! மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வாழ்த்து..!!
ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு தலைவர் வசீகரன் அவர்களின் மகன் டிடார், மணமகள் யாஸ்மின் ஆகியோரின் திருமண விழா சென்னை மதுரவாயல் பாக்கியலக்ஷ்மி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இத்திருமண நிகழ்வில் பொருளாளருடன் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் அமீர் அப்பாஸ், துறைமுகம் அசன் அலி, அஸ்கர் அலி, சிக்கந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருவள்ளூர்_மாவட்டம் 27.09.2021
நாகை மாவட்டம் திருப்பூண்டி கிளை சார்பாக மஜக கொடியேற்றம் நிகழ்வு…! மாநில செயலாளர் பங்கேற்பு..!
மனிதநேய ஜனநாயக கட்சி #MJK நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம், திருப்பூண்டி கிளை சார்பாக கொடியேற்றம் நிகழ்ச்சி நான்கு இடங்களில் நடைப்பெற்றது. இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் J.ஷாகுல் ஹமீது முன்னிலை வகிக்க, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜ்தீன் அவர்கள் கலந்து கொண்டு கொடியினை ஏற்றி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக கத்தார் மண்டல பொருப்பாளர் ஃபார்மனுல்லாஹ் , மாவட்ட பொருளாலர் சதக்கத்துல்லாஹ், நாகை ஒன்றிய துணை செயலாளர் சதாம் மற்றும் நாகூர் நகர பொருலாளர் ஷாகுல் ஹமீது அவர்கள் கலந்து கொண்டனர். மேலும் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் #MJTS அறிமுகம் செய்து தொழிற்சங்கம் கிளை செயலாளர் அவர்கள் முன்னிலையில் புதியவர்கள் உறுப்பினராக இணைத்து கொண்டனர். இதில் திருப்பூண்டி கிளை நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #நாகை_மாவட்டம் 26.09.2021
விருதுநகரில் விவசாயிகளுக்கு ஆதரவாக முற்றுகை போராட்டம்! மஜகவினர் பங்கேற்பு!
ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகநாடு முழுவதும் முழு வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக விருது நகர் மாவட்டம் அனைத்து கட்சியினர் சார்பில் ஸ்டேட் பேங்க் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் கண்மணி காதர் அவர்கள் தலைமையில் மஜக வினர் பங்கேற்றனர் மற்றும் தோழமை கட்சியினர் திரளாக பங்கேற்றனர். #Istandwithfarmers #mjkstandwithfarmers தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #விருது_நகர்_மாவட்டம் 27.09.2021