நாகையில் அஸ்ஸாம் அரச பயங்கர வாதத்தை கண்டித்து மஜக ஆர்ப்பாட்டம்! மாநில துணை செயலாளர் நாகை முபாரக் கண்டன உரை நிகழ்த்தினார்!

அஸ்ஸாமில் சிபாஜ்ஹாரில் 30 ஆண்டுகளாக குடியிருந்த மக்களை விரட்ட அரச பயங்கரவாதத்தை ஏவிய பாஜக அரசை கண்டித்து இன்று நாகை நகரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர செயலாளர் அஜிஜுர் ரஹ்மான், அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா, மாவட்ட துணை செயலாளர் கண்ணுவாப்பா @சாகுல் ஹமீது, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் ரெக்ஸ் சுல்தான், முன்னிலை வகித்தனர்.

மாநில துணை செயலாளர் நாகை முபாரக், அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்.

ஆர்ப்பாட்டத்தில் நகர பொருளாளர் அப்துல் (செல்லத்துரை) மற்றும் மண்டல நிர்வாகி ஃபர் மானுல்லாஹ், ஒன்றிய துணை செயலாளர் மஞ்சை சதாம், நகர நிர்வாகிகள் ஹாஜி அப்துல் காதர், அனாப் ,ரிபாய், அனிஸ், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நாகை_மாவட்டம்
01.10.2021